உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

❖ மறைமலையம் - 20

அதற்கேற்பப் பெருந்தகைமையுடையவனும்; திருவளர் செல்வன் -செல்வங்கள் ஓங்குகின்ற நிறைவுடையவனும் ஆன அவன்,

வடிவின் உணர்விற் புகழிற்கையன்; வில்லன்; கணையன்; குஞ்சியன்; அரியன்; பெரியன் செல்வன் என இயைக்க.

இந்நூல்கொண்ட முருகப்பெருமான் திருவொற்றியூர்ச் சிவபிரான் திருக்கோயின் முகப்பில் எழுந்தருளியிருப்பவ னென்பார், “முற்படவமர்ந்த" வென்று கிளந்தார்.

ஆனா, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; அமையாத வென்பது பொருள்; அமைதிப்படாத வென்றுகொள்க; என்பது புறப்பொருள்

66

காலையானாக் கூற்றம்” வெண்பாமாலை (காஞ்சி, 13).

பயிலல், பலகாலுந்தோன்றல்; “பயிற்றி” என்பதற்குப் "பலகாலுங்கூறி”

என்று

புறநானூற்றுரைகாரர் (34) பொருளுரைத் தமையால் அச்சொற் பலகால் நிகழும் நிகழ்ச்சியினை யுணர்த்துதல் அறியப்படும்.

வடிவு, உணர்வு, புகழ் என்பவற்றிற்கு இரண்ட ாவது விரிக்க. இன், சாரியை.

'தாடொட வீழ்ந்தகை' என்பது “தாடோய் தடக்கை’ (புறநானூறு, 90)” என்று இலக்கியங்களிற் பயின்றுவரலறிக.

கையன், வில்லன் முதலாயின குறிப்புவினைப் பெயர்கள். சல்வம்' நிறைவு; "செல்வமென்பது சிந்தையிநிறைவே' யென்னும் மணிமேகலையடிகள் இங்கு நினைவுகூரற்பாலது.

(45) இன்னுங், குடியினாலுங் குலத்தினாலுங் குற்றமொன்று மில்லாதவன்.

குடியென்பது குடும்பம், அதாவது ஒருவனைச் சூழ்ந்த அகச்சுற்றம்; குலமென்பது புறச்சுற்றம். குடியின் கண்ணுங் குலத்தின் கண்ணுமென ஏழனுருபு விரித்தலுமாம்.

(46-47) பெறுவது ஒன்று உடையன்போல - என் மாட்டுப் பெறுவதொரு பொருளுடையான்போல, மறுவந்து சுழன்று, பல்நாள் எனினும் என்சொல் நிலைதவறான் - அதனைப் பெறுதற்குப் பலநாட்கள் கழிந்தனவேனும் யான் எனது சொல்லால் நிறுத்திய நிலையினின்றுந் தவறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/115&oldid=1586854" இலிருந்து மீள்விக்கப்பட்டது