உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை மெல்லிலை யரியாம்பலொடு

வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கை.

89

என்று ஆசிரியர் மாங்குடிமருதனாரும் மதுரைக்காஞ்சியில் (249- 253) உரைத்தல் கண்டுகொள்க.

(35) தண்ணடை மருவிய தணியாவிளையுள் மருதநிலங்கள் பொருந்திய குறையாத விளைவினையுடைய, திருவொற்றியூ ரென்று மேலடியோடு ஒட்டுக.

66

தண்ணடை, மருதநிலம்; இ ஃதிப்பொருட்டாதல், 'தலையளித்தான் தண்ணடையுந் தந்து” என்னும் புறப்பொருள் வெண்பா மாலையிற் (2, 12) காண்க.

'விளையுள்' உள் விகுதிபெற்ற தொழிலடியாகப் பிறந்த பெயர்; "பெயலும் விளையுளும்" என்பது திருக்குறள் (545).

விளங்கவும் (26), பரந்திருப்பவும் (29), இமைப்பவும் (34) தண்ணடை மருவிய விளையுள் ‘ஒற்றிமாநகர்' என்று வினையெச்சங்கட்கு உம்மைவிரித்துக் கூட்டிக்கொள்க.

(36-44) ஒற்றிமாநகரின் - திருவொற்றிமாக் கோயிலின்கண், முற்பட அமர்ந்த - சிவபிரானெழுெந்தருளிய கருவறைக்குநேரே முன்னிடத்திற் குடிகொண்டெழுந்தருளிய, உட்கு முருகன் - தெய்வத்தன்மையாற் கண்டார் அஞ்சுதற்கு உரிய முருகப் பிரானை, கண்கண்டாங்கு கண்ணெதிரே

உடை

கண்டாலென்ன, பார்த்து ஆனாப் பயில்வடிவின் - கண்ணாற் கண்டு அமையாத அகக்கண்ணெதிரே பலகாலுந் தோன்றும் வடிவினையும், ஓர்த்து ஆனா உரன் உணர்வின் - ஆராய்ந் தமையாத சிறந்த அறிவினையும் உணர்ச்சியினையும், சொல் ஆனாப் பல்புகழின் - சொல்லியமையாத மிக்க புகழினையும் உடைய, தாள்தொட வீழ்ந்த கையன் முழந்தாளிற் பொருந்தும்படி வளர்ந்த கையினனும்; தோள்தொடு

பொன்ஞாண் பிணித்த வில்லன்- தோளிற்பொருந்தும் பொற்கயிறுகட்டிய வில்லினனும்; கணையன் - அவ்வில்லிற் றொடுக்கும் அம்புகளையுடையவனும்; மின்ஞாண் பிணித்த குஞ்சியன் - மின்னுகின்ற பொன்ஞாணால் வளைத்துக்கட்டிய மயிர்முடியினனும்; இளைஞன்

அரியன்

-

-

-

கட்டிளம் பருவத்தினனும்; யாவராலும் அணைதற்கரியவனும்; பெரியன்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/114&oldid=1586853" இலிருந்து மீள்விக்கப்பட்டது