உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம் - 20

‘பொன்’பசும்பொன்; இங்கு நிறத்திற்கு உவமை.

‘பைத்து’, பசுமையென்னும் பண்புப்பெயரின் றிரிபு; ஈறுகெட்டு முன்னின்ற மெய்திரிந்து தன்னொற்றிரட்டி முடிந்ததெனக் கொள்க; இது பசுமைநிறத்தை யுணர்த்துதல் திவாகரத்திற் (8) காண்க.

-

பளிங்கினுள்

-

(30-34) தென்ஒளிப் தெளிந்த ஒளியையுடைய ஒரு பளிங்குப்பேழையுள், அயிர்பெய்து நுண்மணலையிட்டு, பாசிலையும் சேதாம்பலும் கள் குவளையும் முள் தாமரையும் பசிய இலைகளையுஞ் சிவந்த ஆம்பன் மலர்களையுந் தேன் பொருந்திய குவளைப்பூக்களையும் முள்ளுள்ள தாமரை மலர்களையும், ஒருங்குபட எழுதி மருஞ்கு வைத்தாங்கு - ஒன்றாய் எழுதிப் பக்கலில் வைத்தாற்போல, நல்பூம்கயங்கள் பொற் பொடும் இமைப்ப - அழகிய பூக்கள் நிறைந்த நீர்க்குளங்கள் ஆங்காங்கு அழகாய் விளங்கவும்.

பளிங்கு குளத்தின் தெளிநீருக்கு உவமை. ‘அயிர்' நுண்மணற் பொருட்டாதல் 'வெள்ளயிர்க்கானல்' (இந்நூல், 1, 25) என்புழிக் காட்டப்பட்டது.

பசுமை இலை ‘பாசிலை'யெனவுஞ், செம்மை ஆம்பல் 'சேதாம்ப' லெனவுந் திரிந்து புணர்ந்தன. இதனை ‘ஈறுபோதல்' (நன்னூல், பத. 9) என்பதனால் முடிக்க.

அதன்

குளத்தின் நீரைப் பளிங்கெனக்கொண்டு, அடியிலுள்ள மணற்றரை ‘அயிர்பெய்து' என்னுந்தொடராற் கண்ணுக்குக் காணப்படுவதாக உரைக்குமுகத்தாற் குளத்தின் அடிமுதல் மேல்வரையில் எடுத்துக்காட்டுதலே ஈண்டு ஆசிரியர் கருத்து. ஆம்பல், குவளை, தாமரை, முதலாகுபெயர்.

‘ஆங்கு’உவமவுருபு; "கடற்கண்டாங்கு" (திருமுருகாற்றுப்

படை, 2) என்புழிப்போல.

சேதாம்பலுங்

கட்குவளையும்

பொய்கையினியல்பை

முதலாயின வெடுத்துக்காட்டிப்

ஆசிரியர் ஈண்டுச்

விளக்குதல்போலவே,

“முட்டாள சுடர்த்தாமரை

கட்கமழு நறுநெய்தல்

வள்ளித ழவிழ்நீல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/113&oldid=1586852" இலிருந்து மீள்விக்கப்பட்டது