உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

87

கழனியிலுள்ள அகன்ற

-

-

(22- 26) வயல்உழவர் குவளைகட்டு உழவர்கள் குவளைப்பூடு களைந்து, வியல்வரம்பில் வரம்பின்மேல், தடிந்திட்ட கயலின் இடைப்பட எறிய 6 கொன்றுபோட்ட கயல்மீன்களின் நடுவில் விழும்படி எறிய, மருதமகள் கருவிழிபோல் பொருவு இன்றித் திருவிளங்க - அக்குவளையின் மலர்கள் மருதநில மகளின் கருவிழியைப்போல் ஒப்பின்றி அழகுவிளங்கவும்,

'வெள்ளை வெளே' லென்று மின்னிக்கிடக்குங் கயல் மீன்கள் மருதமகளின் வெள்விழியாக, அவற்றிடையிற் பொருந்திய குவளை மலர்கள் அவட்குக் கருவிழியாய்

விளங்கினவென்க.

வயலுழவர், - வயற்கண் உழவர்.

கட்டல், களைதல்; என்றது ‘களைகட்ட’ லென்க; கள் என்னும் முதனிலை இடைநிலையும் வினையெச்ச விகுதியுமான தகரவுகரஞ் சேர்ந்து, “ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும்” (தொல். எழுத்து,150) என்னும் புணர்ச்சி விதிப்படி ளகரதகரங்கள் டகரமாய் இடைதிரிந்து ‘கட்டு’ என முடிந்தமை

காண்க.

வியல், உரிச்சொல்; “வியலென் கிளவி யகலப் பொருட்டே” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார் (உரி. 68). மருதநிலம், வயலும் வயல்சார்ந்த இடமுமாம். இந்நிலம் இங்கு ‘மகள்' என்று உருவகப்படுத்தப்பட்டது.

(27-29) நெந்நெல் வித்திய பொன் உறழ் வான்முளை சின்னாட்குமுன் வித்திய செந்நெல் விதையின் பொன்னொக்குந் தூய முளைகள், புரி அவிழத் தலை விரிந்து - முறுக்குடையத் தாள் விரிந்து, பைத்துஎன்னப் பரந்து இருப்ப - பச்சைப் பசேலெனப் பரந்து திகழவும்;

‘வித்திய செந்நென்முளை'யென மாறுக.

-

'செந்நெல்', நெற்களுள் உயர்ந்தது; இதனால் இதற்கு ‘நன்னெல்' எனவும் ஒரு பெயருண்டு; இது, “செந்நெ னன்னெல் செஞ்சாலிப் பெயர்” என்னும் பிங்கலந்தை (மரப்பெயர்) யிற்

காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/112&oldid=1586851" இலிருந்து மீள்விக்கப்பட்டது