உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

66

மறைமலையம் - 20

"வருநாளென் றும்பிழையாத் தெய்வப் பொன்னி

வளம்பெருக்க வளவர்குலம் பெருக்குந் தங்க டிருநாடு போற்செழியர் தென்னாடு விளக்குஞ்

சீர்விளக்கின் செய்யசீ றடிகள் போற்றி”

என்று சேக்கிழார் பெருமான் மங்கையர்க்கரசியாரைச் ‘சீர்விளக்கு' எனக்கூறி மகிழும் அருளுரையினும் நன்கு பெறப்படும்.

(19-21) நின் அருள் நாடி -நினது அருளிச்செய்கையை எதிர்விரும்பி, இங்குத் துன்னி நின்று - நின்னை அணுகி நின்று, நின்றுநின்னை அடியேன் கூறும் ஒடியாய்ச் சிறுமொழி - அடியேன் சொல்கின்ற கேடில்லாச் சிறுமொழியை, வறிதுஎன ஒழியாது அறிவுகொளல் வேண்டும் - சிறியதென்று நீக்காமல் திருவுளம்பற்றல் வேண்டும்;

இங்கு ‘அருள்' என்றது, குற்றங்கண்டவழிப் பொறுக்கும் அருளை. 'துன்னி நின்றிங்’ கென்பது, உள்ளத்தின் அணுக்கத்தை ணர்த்துதற்கெழுந்தது; உடலணுக்கமும் அதன்வழித் தாகலின்.

ாத

'ஒடியாய்சிறுமொழி' பயன் விளைத்தலிற் கெ சிறுசொல்; என்றது பொருளுரையாகுமென்றற்கு; ஒடியா இப்பொருட்டாதல் “ஒடியாவுள்ளம்” என்பதனுரையிற் காண்க (பரிபாடல், 2, 36). “வறிதுசிறிதாகும்" (தொல். உரியியல், 40). பணிவுகாட்டல் கருதிச் சிறுமொழியென்றாள். 'அறிவுகொளல் வேண்டு' மென்றது, ஆராய்தல் வேண்டுமென்றற்கு; சிறு மொழியை ஏற்றொழுகல் வேண்டுமென்பது குறிப்பு.

66

அடிகண் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்

என்னுஞ் ஒத்துநோக்கி யுணரற்பாலன.

சிலப்பதிகாரவடிகள் (13)

இவ்வடிகளோடு

'பாவாய், திருவனையாய், முத்தனையாய், சுடர்க்கொடியே, உயிரோவியமே, மணிவிளக்கே, அடியேன் கூறும் ஒடி யாய்ச் சிறுமொழி அறிவுகொளல் வேண்டு' மெனத் தொடர்புபடுத்துக.

இனி, மேல் 'வயலுழவர்' முதல் 'விளையுள்' ஈறாகப் பதினான்கடிகாறும் ஒற்றிமாநகரைச் சிறப்பிக்கு முகத்தால், மருதநிலவளன் கூறுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/111&oldid=1586850" இலிருந்து மீள்விக்கப்பட்டது