உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

85

'ஆயமும் யானும்' என்று தன்னை ஆயத்தினின்றும் பிரித்துக் கூறினாள், முதன்மை கருதி.

மங்கைப்பருவத்திற் பெண்டிர்க்கு நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலான இனிய பெண்மையியல்புகள் விளைதலின், அவைதாமே ஈண்டுத் தலைவிக்கு ‘நற்பயன்' எனப்பட்டன வென்பது.

முற்றம், நீர், பயன், உருவகச்சொற்கள்.

கொடிமுதலானவெல்லாம்

-

டைப்

(14-15) நக்கும் - சிரித்தும், புக்கும் சிரித்தும், புக்கும் எம் ஆயத்தின புகுந்தும், மிக்க மகிழ்செய்யும் - எமக்கு மிக்க மகிழ்ச்சியை விளைக்கின்ற, செயிர் அற எழுதிய உயிர் ஓவியமே - குற்றம் இல்லையாக எழுதிய உயிருடைய ஓவியமனையாய்.

காட்சிக்கு இனிதாகிய ஓர் ஓவியம் நகுதலும் அசைதலு மான உயிர்ச்செயலும் உடையதாயின், அது கண்டார்க்கு மிக்க மகிழ்ச்சியை விளைத்திடுமாகலின், இங்ஙனங் கூறப்பட்டது. மகிழ், முதனிலைத் தொழிற்பெயர்.

(16-18) அருமையின் மிகுந்த எம்பெருமுதல் தந்தை அருமையினாற்சிறந்த எங்கள் பெருமைமிக்க முதல்வனான கோமகன், ஆற்றா விருப்பொடும் ஏற்றிப்பார்க்கும் - தாழாத விருப்பத்தோடும் ஏற்றிப் பார்க்கின்ற, விளிவுஅற விளங்கிய ஒளிமணிவிளக்கே - அவிதலின்றி என்றும் ஒரு பெற்றித்தாய் விளங்குஞ் செம்மணியின் ஒளிவாய்ந்த விளக்கனையாளே;

கல்வி, கேள்வி, செல்வம், செல்வாக்கு, நல்லொழுக்கம், ஈகை, தலைமை, முதலியவற்றாற் பிறரெல்லாரினும் அரியனாய்ச் சிறந்தவனென்றற்கு 'அருமையின் மிகுந்த' வெனப்பட்டது.

விளக்கிலெரியுந் தீப்பிழம்பு செம்மணியின் வடிவத்தை ஒத்திருத்தலின், மணிவிளக்கென்று உவமிக்கப்பட்டது. அன்றி அழகிய விளக்கெனலும் ஆம்.

விளக்கேற்றிப் பார்த்தலைத் தலைவிக்கு உரைக்கும்போது, 'தந்தை அவளை ஈன்றெடுத்துக்காண்ட’லென்று கருத்துக் கொள்க. ஒவ்வொரு குடியிலும் நன்மக்களைப் பெற்றெடுத்த லென்பது அக்குடிக்கு விளக்கேற்றி வைத்தல் போலாம் எனக் கொள்வது தமிழ்நாட்டார் வழக்கு. இவ்வுண்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/110&oldid=1586849" இலிருந்து மீள்விக்கப்பட்டது