உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் 20

“தீம்பால் சுமந்து முலைவீங்கித் திருமுத்தீன்ற வலம்புரிபோற் காம்பேர் தோளார் களிறீன்றார்”

என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளானும் (முத்தியிலம்பகம், 104) அறியப்படும்.

முத்துக்களுள்ளும் பருமுத்தங்களே சிறந்தனவாதல் "பரூஉக்காழ் ஆரம்" (சிலப்பதிகாரம், 4, 41) என்னும் இளங்கோவடிகள் திருமொழியிலும், “கிம்புரிப்பகுவாய்க் கிளர்முத்து" (சிலப். 5, 150) என்னுமிடத்துக் 'கிளர்முத் தென்பதற்குப் ‘பருமுத்து’ என உரைக்கும் அடியார்க்கு நல்லார் உரையிலும் அறியப்படும்.

(10 -13) மிடி அறியா எம் குடி எனும் முற்றத்து வறுமையென்பதறியாத எமது குடும்பமென்னும் முன்றிலில், அன்புநீர் பாய்ச்சி - அன்பு என்னும் நீரை நாடோறும் பாய்ச்சி, இன்புஉறக்கைசெய்து - நீயும் நின்னைக் கண்டாரும் மகிழ்ச்சி பொருந்தும்படி ஒப்பனைசெய்து, ஆயமும் யானும் சீரிதின் வளர்க்கும் தோழியர் கூட்டமும் யானுஞ் செல்வமாய் வளர்த்துவரும், நல்பயன்கனிந்த பொன் சுடர்க்கொடியே நல்லவாகிய பயன்கள் முதிர்ந்த பொன்னிறமான ஒளிமிக்க பூங்கொடியனையாய்;

-

முற்றம், வீட்டுக்கு முன்னிடம்; இதனை 'முன்றி'லெனவும்

உரைப்ப

நெகிழ்ச்சி, இடங்கண்டவழி விரைந்தோடல், அடைத்தும் அடைபடாமை, உயிர்களை வளர்த்தல், ஈரமுடைமை முதலிய ஒத்த வியல்புகளான், அன்பை நீரெனவே எல்லாத் தமிழிலக்கியங் களும் ஒத்து உருவகப்படுத்துரைப்பவாயின. உரையாசிரியர் பரிமேலழகர் மூன்றாம் பரிபாடலுரையில் (65) அன்பினை மென்மையென்றுரைத்தமையும் இங்கு

நினைவுகூரற்பாற்று.

கொடிகளுக்குக் கைசெய்தலாவன: கொழுகொழும்புகளை அருகணைத்து அவற்றின்மேல் அவைகளை எடுத்துவிடல், முட்களால் நெருக்குண்டு மடிந்துகிடக்கும் இலைகளையும் மலர்களையும் கொழுந்து வருங் கொடிகளையும் நிமிர்த்திவிடல் முதலாயினவென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/109&oldid=1586848" இலிருந்து மீள்விக்கப்பட்டது