உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

83

(6-7) வழிவழிச் சிறக்கும் எம் கழிபெரும் குலத்தின் தலைமுறை தலைமுறையாகப் பெருமையிற் சிறந்துவரும் எமது மிகஉயர்ந்த குலத்திற்பிறந்த, பால்கடல் தோன்றிய சீர்த்திரு அனையாய் திருப்பாற்கடலினின்றும் எழுந்த அழகிய

-

திருமகளையொத்தவளே;

வழி, கால்வழி; அடுக்குப் பன்மைப்பொருளது.

தன்மைப்பன்மை;

எம், பன்மையன்று.

‘அனையை' யென்னும்

உளப்பாட்டுத்

தன்மைப்

முன்னிலைமுற்றுச்சொல்

ஈறுதிரிந்து விளியேற்றது.

(8-9) வலம்புரி அன்ன

-

வலம்புரிச் சங்கினையொத்த,

-

எம்குலம்புரி கோமகள் எங்கள் குலத்தோர் விரும்புகின்ற கோப்பெருந்தாய், அரிதின் ஈன்ற பெருமுத்து அனையாய் - அருமையாய்ப் பெற்றெடுத்த முத்தையொப்பவளே;

வலம்புரி, வலமாகச் சுழிந்தமைந்த சங்கு; இதனையே சங்கினங்களில் மிகவும் உயர்ந்ததென்ப.

"இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக்கூறும்

வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின்.”

என்னும் பெரும்பாணாற்றுப்படை யடிகளிலும், (34-35) "விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்கில், மேலாக உலகங்கூறும் வலம்புரிச்சங்கையொத்த குற்றநீங்குந் தலைமையினையும்" என்று அவ்வடிகட்கு ஆசிரியர் நச்சினார்க் கினியருரைக்கும் உரையிலும் இஃது அறியற்பாலது, இங்கும் ‘வலம்புரியன்ன கோமக' ளென்பதற்கு இத்தலைமைப்பொருளே பொருளாம். எனவே இது பண்புவமையென்க.

குலத்துக்கேற்ற ழுக்கமுடைமையிற்,கோமகளைக் 'குலம்புரி கோமக' ளென்றார். குலம், ஆகுபெயர்.

.

கோமகளென்றது நற்றாயை. நற்றாயை வலம்புரி யென்றமையின், அவள் அரிதின் ஈன்றமகள் பெருமுத் தெனப்பட்டாள். இவ்வாறு சிறப்பித்துக் கூறுதல் இலக்கியமரபு;

இது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/108&oldid=1586847" இலிருந்து மீள்விக்கப்பட்டது