உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

  • மறைமலையம் - 20

கொடிபுரைமருங்குல் - வஞ்சிக்கொடியை நிகர்க்கும் இடையினை யும், கடிதிகழ்மேனி - ஒளிவிளங்கும் நிறமமைந்த உடம்பினையும் உடைய, கரும்பினும் இனிய கருப்பஞ்சாற்றினும் இனிய இயல்பினையான, என் அரும்பெறல் பாவாய் - என் பெறலரிய பாவையையனையாய்! என்றது, தோழி தலைவியையென்க.

-

'நேர்இறை முன்கை' என்றது ஒத்தவரிகளை (இரேகைகளை) யுடைய முன்கையை; இறை என்பது வரியெனப் பொருடருதல் “பிறங்குவரி பொறிவரை இறையாகும்” என்னும் பிங்கலந்தையிற் காண்க (ஆடவர்வகை). ‘ஒலிகூந்த’லென்றது, கூந்தலின் அடர்த்தி கூறியவாறு. “ஒலிமென் கூந்தல்” என்னுங் குறிஞ்சிப்பாட்டுத் (2) தொடர்க்கு ஆசிரியர் நச்சினார்க்கினியருரைக்கும் உரையில் இவ்வுண்மை காண்க. ஒலித்தல், தழைத்தலென்னும் பொருட்டு. விளங்கும்நுதல் ஓர் அரைவட்டம்போற் றோன்றலால், 'நில' வென்றற்கு ஈண்டு எட்டாம்பிறைத் திங்களென்று உரைக்கப்பட்டது.

“மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் பசுவெண் டிங்க டோன்றி யாங்குக்

கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்.

என்று குறுந்தொகைப் பாட்டிலும் (129) இவ்வியல்பு ஆசிரியர் கோப்பெருஞ்சோழரால் விளக்கமாய் எடுத்துக்காட்டப்

பட்டிருத்தல் அறியற்பாலது.

மாதரிடைக்கு வஞ்சிக்கொடியுவமையாதல், "வஞ்சிம் மருங்குல்”, “வஞ்சியஞ்சும் இடை டை என்னுந் திருக்கோவையாரிற்

(22, 32) IT GOI .

மேனியை

நிறமெனவும்

உடம்பெனவும்

இரட்டுறமொழிந்து கொள்க. என்னை? நிறமமையாது உடம்பின்கண் விளக்கந் திகழாதாகலினென்பது.

‘கையுங் கூந்தலுங் கண்ணும் வாயும் நுதலும் மருங்குலும் மேனியும் உடைய ய பாவா'யென எண்ணும்மை விரித்துத்

தொடரியைத்துக் கொள்க.

""

பாவாய், உருவகம்; “அவற்றுள் இ ஈயாகும் ஐஆய் ஆகும் (தொல்காப்பியம், சொல், 4) என்னுந் தொல்காப்பியத்தான் இதன்கண் ஐயீறு ஆயெனத்திரிந்து விளியேற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/107&oldid=1586846" இலிருந்து மீள்விக்கப்பட்டது