உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

81

சிறகுகளையுடைய வண்டுக் கூட்டங்களே, நன்று அன்று உனக்குத் திருவொற்றி வேலரை நாடி இடர் இன்று இங்கு நீ கொள்ளல் என்று உரையீர் - ‘திருவொற்றி நகரிலுள்ள வேலுடை முருகரை விரும்பி இங்கிப்பொழுது நீ துன்பங்கொள்ளுதல் உனக்கு நல்லதன்று' என்று சொல்கின்றிலீர்!, இனிமேல் எமக்கு நின்று இங்கு நீர் செய்யும் நன்மை என்னோ இனிமேல் எனக்கு நீங்கள் அருகிருந்து செய்யும் நன்மை என்னவோ, ஒன்றும் நேர்வது இன்று-ஏதும் உங்களால் ஆவது இல்லை.

-

‘நன்று’, பெயர். ‘நீ எமக்கு', ஒருமைப்பன்மை மயக்கம். நொய்மை, மென்மை.

ஓ ஒழியசை; ஏ ஈற்றசை.

'கழிகாள் வண்டினங்காள் உரையீ’ரென்றது “ஞாயிறு திங்கள் அறிவே நாணே" மென்பதனாற் கொள்ளப்படும் (தொல்காப்பியம், செய்யுள் 202). காமம் மிக்க உறுதுயர்ச் சொல்லாதலிற், கழிகளையும் வண்டுகளையும் விளித்து இவ்வாறு கூறினார்.

4. தோழி விரவிக் கூறல்

'தோழி விரவிக்கூறல் என்றது, தலைவனது குறையிரப்புக்கு மதியுடம்பட்ட தோழி, தன் தலைவியையும் அதற்கு இசைவித்தல் கருதி, மென்மையும் வன்மையும் விரவிக்கூற லென்பது, முதலில் மென்மையாற் கூறியதோழி, தலைமகள் தனது நாணத்தாற் குறை நேராமை கண்டு, இங்ஙனம் விரவிக் கூறுகின்றாளென்க. திருச்சிற்றம்பலக்கோவையாருள் (84) ‘விரவிக்கூற லென்று வருந்துறைக்கு ஆசிரியர் பேராசிரியர் “மென்மொழியொடு சிறிது வன்மொழிபடக் கூறாநிற்றல்” என்று இங்ஙனமே விளக்கமுரைத்தார்.

(1 முதல் 5 5 அடி) நேர் இறை முன்கை ஒத்த வரிகளையுடைய முன்கைகளையும், வார் ஒலிக் கூந்தல் - நீண்ட தழைத்த கூந்தலையும், அரிகடை ஒழுகிய பெருமதர் மழைக்கண் - செவ்வரிகள் முனைவரையில் ஓடிய பெரிய களிப்புப்பொருந்திய குளிர்ந்த கண்களையும், இலவு உறழ்செய்வாய் - இலவின் இதழையொத்த சிவந்த வாயிதழ்களையும், நிலவு உறழ் திருநுதல் - எட்டாம்பிறைத் திங்களைப்போன்ற அழகிய நெற்றியையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/106&oldid=1586845" இலிருந்து மீள்விக்கப்பட்டது