உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

-

மறைமலையம் - 20

2. அருளியலுரைத்தல்

என்

'பெற்றி அரிய பெருமான்' என்பதை அரியபெற்றிப் பெருமான் என மாறி, உயர்ந்த இயல்புகளையுடைய தலைவன் என்றுரைகூறுக; பெரிய திருவொற்றி நகர் வந்த ஒள்வேலான் - பெரிய திருவொற்றி நகரத்தில் எழுந்தருளிய ஒளிமிக்க வேற்படையை யுடையவன்; நல் தவரும் காணா அரிய கழலான் மிக்க தவமுடையாருங் காணமாட்டாத அரிய திருவடியை யுடையவன் ஆகிய முருகன், எனது உளத்து நாணாது அமர்ந்தவா நன்று ஏழையேனுள்ளத்திற் கூசாது எழுந்தருளிய வாறு மிக நன்று! 'அரிய பெற்றிப்பெருமா’ னன்க. அரியபெற்றி யாவன, 'தன்னுரிமையனாதல்' முதலிய எட்டியல்புகளுமாம். தன்னுரிமை யனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே வினைகளி னீங்குதல், பேரரு ளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்ப முடைமை எனவிவை.

-

வுள்

'அரிய இயல்புகள், வாய்ந்த திருவொற்றியங்கட தவமுடையாரானுங் காண்டற்கரிய கழலுடையனாயிருந்தும், ஏழையேனுள்ளத்தும் எழுந்தருளியவாறு ஆ, மிகநன்று' என்று வியந்துரைத்தபடியாம்; எனவே அவன் அருளியல்புரைத்தா

ராயிற்று.

‘காணா’, ‘அமர்ந்தவா', என்பவற்றில் ஈறு குறைந்தன. ‘எனதுளத்து' மென்று இழிவுசிறப்பும்மை விரித்துரைத்தலு மொன்று; ‘நற்றவரும்' என்பதன் உம்மை உயர்வு சிறப்பு.

'நாணாது,' 'நன்று' என்னுஞ் சொற்கள் உயிரின் தாழ்வையும் இறைவன் உயர்வையும் விளக்காநின்றன.

பெருமான் வேலான் கழலான்' என்றவும், 'முதல்வன் வேலன் செய்யன் கையன் பெரியோன் அரியன்' என்று முன் வந்தனவும் "ஒரு பொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி” (தொல்காப்பியம் கிளவியாக்கம், 42)

3. காமமிக்க கழிபடர் கிளவி

அகல் ஈர்ம் கழிகாள் - அகன்ற குளிர்ந்த கழிகளே, மின் தங்கு நொய் சிறைவண்டு இனங்காள் - மின்ஒளி பொருந்திய மெல்லிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/105&oldid=1586844" இலிருந்து மீள்விக்கப்பட்டது