உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிரப்பிய

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை பொன்னாலான கலம்விளங்குந்

யொப்பவென்க.

79

தன்மையை

‘கடம்பு’ மாலையை யுணர்த்துதலின் ஆகுபெயர்.

‘தடம்' பெருமைப் பொருட்டாதலைத் “தடவுங்கயவும் நளியும் பெருமை” என்னுந் தொல்காப்பியத்தால் (உரி 22)

அறிக.

66

விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பு” மென்று தொல்காப்பியனார் (உரி. 55) கூறுதலின், 'விழுIF' னென்பதற்குச் சீருடனென்று உரையுரைக்கப்பட்டது.

‘வாழ்மதி’, மதி, முன்னிலையசை.

‘விழுமிதி

பொலம், பொன்; 'பொன்’ னென்னுஞ்சொல் ஈறுகெட்டு லகரமும் மகரமும் முறையே பொருந்திப் பொலம்' எனத்திரிந்து முடிந்ததென்று ஆசிரியர் தொல்காப்பியனார் “பொன்னென் கிளவி' (புள்ளிமயங்கியல், 61) யென்னும் நூற்பாவிற் கட்டளை யிடுவர்.

‘என’ உவமச்சொல்; இதனைப் பின்னுள்ளோர் உவமவுருபென்றே கொண்டனர். “என்ன விகல விழைய வெதிர’ வென்பது தண்டியலங்காரம் (பொருளE 33.)

'பெற்றியென ஒருகலனாக வாழ்மதி' யென்று முடிக்க.

எனவே ‘ஒற்றிமாநகர் முதல்வன் திருவுரு எழுவித்து வழிபாடியற்றி யின்புற லறியாது புன்பொருள் கவரு மனனே' யென்று நெஞ்சை விளித்து, 'முருகன் தானெழுந்தருளும் வான்குடிலாக நின்னைத் தந்தனனாகக் கண்டன சிலவும் புகுவன சிலவும் அடைவன சிலவும் தெளிவன சிலவும் உசும்புன சிலவும் மேவுநையதனால் துன்பமுங் கவலையும் நின்புறனாக இன்புறல் அறியாது இர்ப்படுகுநையே, அதாஅன்று என்னையும் நின்வழிப்படீஇ ஐயனை மருவலொட்டாது வன்மைசெய்த நின் புன்மையோ பெரிது' என்று அதன் பிழைபாட்டுச்செயலை யெடுத்துக்கூறி, 'இனி நீ இங்ஙனம் ஒழியாது நறும்பால் பெய்த பொலங்கலம் என முருகன் திருவுருப்பொதியும் ஒரு கலனாக டுவாழ்மதி' யென்று அறிவுரை கிளந்தாராதலின், இது நெஞ்சொடு கிளத்த லானமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/104&oldid=1586843" இலிருந்து மீள்விக்கப்பட்டது