உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் - 20

‘சிலவும்’ என்பதனொடு பண்புத் தொகையாய் நின்றன.

'மேவுநை' யென்பதில் ஐகாரம் முன்னிலை வினைமுற்று விகுதியெனவும், நகரமெய் அஃதூர்ந்து வருதற்கேற்ற எழுத்துப் பேறேனவுங் கொள்க. 'இடர்ப்படுகுநை' யென்பதில் இவற்றொடு ‘கு’ சாரியையென்றறிக. ஏகாரம், இரக்கப்பொருளது.

‘நீ’ யென்னுஞ் சொல் மேல் 'இனி நீ யிங்ஙன மொழியாது' என்ற விடத்துள்ளது. புறம், பக்கம்.

‘அதாஅன்று, அது அன்று; வருமொழி முதல் நீண்டு அளபெடுத்துப் புணர்ந்தது;

L

(77-81) உறுதுணை ஆகச் செறியும் என்னையும் - உனக்கு உற்ற துணையாகப் பொருந்தும் என்னையும், புல் சாய்த்து ஓடும் புனல்போல - தான் துணையாதற்குரிய புல்லைத் தன்வழிச் சாய்த் தோடும் வெள்ளம் போல,நின் வழிப்படீஇ - நின் வழிப்படுத்தி, என் உயிர்க்கு உயிராம் அறுமுகத்து ஐயனை மருவலொட்டாது என் உயிர்க்கு உயிராகும் ஆறு திருமுகங்களையுடைய தலைவனை அணையவொட்டாமல், வன்மை செய்த நின் புன்மையோ பெரிது - கொடுமை செய்த நின் சிறுமையோ மிகப்பெரிது,

புன்மை, இங்கு வஞ்சித்தொழுகுஞ் சிறுமை யுணர்த்திற்று. ஏகாரமிரண்டும் அசை.

‘மனனே! முருகன் நின்னைப் படைத்த அருட்குறிப்பினை யறியாமல் இடர்ப்படுகுநையே; அதாஅன்று, என்னையும் நின்வழிப் படீஇ ஐயனை மருவலொட்டாது வன்மை செய்த நின் புன்மையோ பெரிது' என்று இணைத்துக்கொள்க.

(82-87) இனி நீ இங்ஙனம் ஒழியாது - இனி நீ இவ்வாறு று அருட்குறிப்பினின்றும் நீங்காமல், பனிமலர்க்கடம்பு சூடிய தடம் தோள் முருகன் குளிர்ந்த மலர்களையுடைய கடம்பமாலையைச் சூடிய பெரிய தோள்களையுடைய ய முருகப்பெருமானது, திரு உருப் பொதியும் ஒரு கலனாக விழுமிதின் நீடு வாழ்மதி - திருவுருவினைப் பாதுகாத்து வைக்கும் இணையற்ற கலனாகச் சீருடன் நீடு வாழ்வாயாக; கொழுவிய நலம் கெழு நறும் பால் பெய்த பொலம் கலம் பொலியும் பெற்றி என இனிய சுவைபொருந்திய நல்லமணமுடைய பாலை இட்டு

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/103&oldid=1586842" இலிருந்து மீள்விக்கப்பட்டது