உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

-

77

தீயின்

கொடுத்தானாக, பின்னை அதன்பின்பு, மண்திரிவு ஆகக் கண்டன சிலவும் - மண்ணின் திரிபுகளாகக் காணப்படும் உடம்பு முதலாகிய சில பொருள்களும், புனல்திரிவாகப் புகுவன சிலவும் நீரின் திரிபுகளாக மாறித் தோன்றும் பால் முதலாகிய சில உணவுகளும், அனல்திரிவாக அடைவன சிலவும் திரிபுகளாகப் பொருந்தும் மணியின் ஒளி முதலாகிய சிலவும், வளி இடனாகத் தெளிவன சிலவும் - காற்றே தோற்றுவாயாகத் தெளியப்படும் மணம் முதலாகிய சிலவும், விசும்பு இடனாக உசும்புன சிலவும் வானம் பிறப்பிடமாக இயங்கும் இசை முதலாகிய சிலவும், ஓவாது இருப்ப மேவுநை - ஒழிவில்லாமல் வந்திருக்க விரும்புகின்றனை, அதனால் துன்பமும் கவலையும் நின்புறன் ஆக- அக்காரணத்தினாலே துன்பமுங் கவலையும் நின்பக்கத்தனவாக, இன்பு உறல் அறியாது இடர்ப்படுகுநையே இன்பம் நுகர்தலறியாமல் நீ இடர்ப்படுகின்றனையே, அது அன்று - அதுவல்லாமல்,

-

நீ

'குடில்' சிறுவீடு; அதாவது அதாவது குடிசை; குடிசை; இறைவனது எல்லையற்ற பெருமைக்கு உள்ளம் ஒரு குடிலாவதேயாயினும் அவன் எழுந்தருளுதற்கேற்ற அன்புரிமை அதற்குண்மையின், அது ‘வான்குடி'லாயிற்று.

நெஞ்சம் மெய் முதலான ஐம்பொறிகளின் வாயிலாய் மண் முதலான ஐம்பொருள்களிலும் பொருந்தி ஊறு முதலான ஐம்புலன்களையும் நுகருமென்று இங்குக் கூறியவாறாம்; இவ்வுண்மையை,

“ஓசைநற் பரிச ரூப விரதகந் தங்க ளென்று

பேசுமாத் திரைக ளைந்தும் பிறக்கும்பூ தாதிகத்தி

னேசவிந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டு மாசைசேர் மனாதி தன்மாத் திரைபுரி யட்டகந்தான்”

(சிவஞானசித்தி, 2-ஆஞ் சூத்திரம், 64) என்னும் அருணந்தி

சிவனார் திருமொழியிலுங் காண்க.

உந்தி

'உசும்புதல்' இயங்குதல்; ஓசையணுக்கள் ஒன்றையொன்று

இயங்கிச்

இயற்கைப்பொருணூலார் கூறுவர்.

செவிப்புலனாமென்று

‘கண்டன' முதலிய ஐந்தும் வினைப்பெயர்களாய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/102&oldid=1586841" இலிருந்து மீள்விக்கப்பட்டது