உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

❖ 20* மறைமலையம் – 20

குறித்தது; திருஞானசம்பந்தப் பெருமான் முதலியோர் அடியார் பெருமக்களை “ஏழையடியார்கள்” (திருவைகாவூர்த் தேவாரம், 1) என்று அருளிச்செய்ததும் அது. வறியேமென்னுந் தன்மைப் பன்மை, தன்னினமான ஏனையோரையுந் தழுவி நின்றது. இது போல்வனவற்றை “உளப்பாட்டுத்தன்மை" (தொல்காப்பியம், வினையியல் 5) யென்பர் சேனாவரையர்; “தனக்கு ஒருமையல்ல தின்மையிற்றன்மைப் பன்மையாவது தன்னொடு பிறரை உளப்படுத்ததேயாம்” என்று அவரதற்கு ஏது உரைத்தலும் ஆண்டுக்காண்க.

எதிர்தல், எதிர்வரல்; ஆவது எதிர்தோன்றல்.

வறியே

‘தவத்தான் முற்றிய பெரியர்க்கும் அரியனாய முருகன் மிடும்பையைப் பொறிபடுத்தெதிரும் பெரியனாயிருத்தலின், அவனை வழிபாடியற்றி இன்புறலறியாது புன்பொருள் கவர்கின்றனையே நெஞ்சே' யென்று இரங்கிக் கூறினாரென்று கொள்க.

றைப்ப துளிப்ப; 'உறைப்பவென்றதனைத் துளிப்ப வென்று ஆசிரியர் நச்சினார்க்கினியரும் பெரும்பாணாற்றுப் படை (379) யுரையில் உரைப்பர். u

'புன்பொருள் சிறுமையையுடைய ய

சிற்றின்பப்

பொருள்கள். அவை ‘மண்டிரிவாகக் கண்டன சிலவு' மென்பது முதலாக மேலே கூறப்படும் பொருள்களென்க.

‘கவரு' மென்றார், பிறரறியாமற் கொள்ளுதலின்; இனி ‘விரும்பு' மென்றுரைத்தலுமாம்.

6

எந்நேரமும் எதனையேனும் நெஞ்சம் சடுதியிற் சடுதியில் மாறி L மாறி

மனனை

நினைத்துக்கொண்டிருத்தலின், 'மின்புரைமனன் என்றார். ஈது தொழிலுவமம். மனன், ஈற்றுப்போலி; ஏ, விளியுருபு.

'ஒற்றிமாநகர் முதல்வன் திருவுரு எழுவித்து வழிபாடியற்றி யின்புற லறியாது புன்பொருள் கவரு மனனே' யென்க.

(66-76) வரம்பு அறும் ஆற்றல் நிரம்பிய முருகன் - அளவு இல்லாத அறிவாற்றல் நிரம்பப் பொருந்திய முருகப் பெருமான், தான் எழுந்தருளும் வான்குடில் ஆக நின்னைத் தந்தனன் ஆக - தான் வீற்றிருந்தருளுந் தூய சிறு வீடாக நின்னை எனக்குக்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/101&oldid=1586840" இலிருந்து மீள்விக்கப்பட்டது