உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

வீடுநல்கி’ யென்றார்.

75

‘வேந்தன்’ மருத நிலக் கிழவன், அஃது ஈண்டு வானோர் தலைவனை யுணர்த்திற்று. பயத்தல் ஈன்றெடுத்தல்.

கூந்தற் குமரி’

தெய்வயானை.

கூந்தலையுடைய குமரி யாகிய

‘உலகளித்த’ வென்பதைச் சூரனைக் கொன்றமையால் தேவரையும், அம்முறையே மக்களையும் பாதுகாத்த வெனக் கொள்க.

றைவன் அருளொடு புணர்ந்து உலகத்தை யளிக்கும் உண்மை பற்றிக், 'கூந்தற் குமரியை மணந்து உலகளித்த வேல' னென்று ஓதினார்; இனி அது வரலாற்றுண்மையுமாம்.

-

(59-65) ஐயன் - எவ்வுயிர்க்குந் தந்தை, செய்யன் - செந்நிற பன்னிரண்டு கைகளை முடையவன், பன்னிரு கையன் யுடையவன், வறியேம் இடும்பை பொறிபடுத்து எதிரும் பெரியோன் - ஏழையேமாகிய எம் துன்பத்தைத் துகளாக்கி எதிர்தோன்றும் பேராற்றலுடையோன், பெரியர் அறிவினுக்கு அரியன் - தவத்தாற் பெரியராயினா ரறிவுக்கும் எட்டாதவன் (ஆகிய முருகப்பெருமானது), திரு உரு ஒருமையின் எழுவித்து- திருவுருவத்தை நெஞ்சொருமையுடன் எழுந்தருளச்செய்து, அருமையொடு வழிபாடு இயற்றி - சிறப்புடன் வணக்கவழிபாடு செய்து, விழி நீர் உறைப்ப அன்பு உருவாகி இன்பு உறல் அறியாது-கண்ணீர்துளிப்ப அன்பு வடிவாகி இன்பம் அடைதல் அறியாமல், புன்பொருள கவரும் என் மின்புரை மனனே சிறுமையுடைய பொருள்களைப் பிறரறியாமற் கொள்ளும் வேட்கைவாய்ந்த என் மின்னலை யொக்க நெஞ்சே.

சிவபிரான் பிள்ளையார் முருகப்பிரான் என்பாரெல்லாம் உண்மையான் நோக்குங்கால் ஒரே முழுமுதற் கடவுளாய் முடிதலிற் சிவபிரானைச் “செம்மேனி யெம்மான் என்றாற்போல முருகக்கடவுளையும் ஈண்டுச் 'செய்யன்' என்றார்.

-

‘பன்னிருகையன்' என்றது, அவனது ஆற்றலுணர்த்தியபடி

யென்க.

‘வறியே’மென்பது இங்கு இன்பத்தின் ஏழைமையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/100&oldid=1586839" இலிருந்து மீள்விக்கப்பட்டது