உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

  • மறைமலையம் - 20

பெரிது உய்ய - துன்பமடைந்து இரங்கி முறையிட்ட விண்வளம் பொருந்திய தேவர் கூட்டம் நீண்டு உயிர்வாழ, வழா வேல் ஓச்சிப்பாடு இல் சூருக்கு வீடு நல்கி - குறி தவறாத வேற்படையை யெறிந்து அழிதலில்லாத சூரபதுமனுக்கு வீடுபேறளித்து, வேந்தன் பயந்த கூந்தற்குமரியை மணந்து உலகு அளித்த தேவர்க்கு அரையன் ஆன இந்திரன் பெற்றெடுத்த தெய்வ யானையைத் திருமணம் பொருந்தி உலகவர்க்கு அருள் புரிந்த, நிணம் திகழ் வேலன்- கொழுப்புக் கறை விளங்கும் வேலை யுடையவன்,.

செல்லல், துன்பம்; அழுங்கல், இரங்கல்; இவற்றைச், ‘செல்லலுற் றிரங்கி” யென்னும் மணிமேகலையிற் காண்க (2, 9).

'மல்லற் றேவ' ரென்றது, 'செல்வப்பேற்றில் வைகுந்தேவ’ ரென்னும் பொருட்டு; தாம் தேடாமலே எல்லா நுகர்பொருளும் பெற்ற தேவரென்க; மல்லல் - வளம், செல்வும்; “மல்லல்வளனே" என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார் (உரி

- 7).

‘பெரிது’ காலப் பெருமை யுணர்த்திற்று; 'பெரிது வைகவும்' என்பதிற்போல (இவ்வகலின் 8ஆம் அடி)

‘பாடில் சூர்’ என்றார், சூரன் தனது தவ வலிமையால் அழியாத நிலையைப் பெற்றிருந்தானாதலின்; இவன்றன் றவவலிமையை அடிகள் மேற் பத்தொன்பதாம் பாட்டிற் பதினெட்டாம் அடிமுதல் ஐம்பத்தோராம் அடிவரையில் மிகவும் விரித்துரைப்பர்; ஆங்கு அவன் தவச் சிறப்பின் வகைமைகளை விளங்க உரைப்பாம். பாடு, முதல் நீண்ட முதனிலைத் தொழிற்பெயர். சூர், ஈறுகெட்டது.

'வீடுநல்கி' யென்றமையின், சூரனது ஊனுடம்பை வேலோச்சிக் கொன்றன ரென்பது தெளியப்படும். 'ஓச்சி' யென்னும் வினையெச்சத்துக்குக் 'கொன்' றென்பது அவாய் நிலை.

சூரன் பகைவனாய் எதிர்த்துப் பொருதானாயினும், அவனுயிர் வினைவி னீங்கி இறைவன் றிருவடிநிலையை யுறுதற்கேற்ற முற்றிய தவப்பேறும் நல்வினையும் உடைமையின், இறைவன் அவனைத் தன்றிருவடிக்கட் சேர்த்தமை குறித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/99&oldid=1586838" இலிருந்து மீள்விக்கப்பட்டது