உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

73

“அவையே தானே யாய்இரு வினையீற்

போக்கு வரவு புரிய ஆணையின்

நீக்கம் இன்றி நிற்கு மன்றே”

என்னுஞ் சிவஞானபோத நூற்பாவைப் பெரிதொத்துத்

தமிழில்

தெளிந்த மகிழற்பாலது.

விளங்கிநிற்றல்

பெரிதும் வியந்து

‘பாவையினகத்து... ஆருயிரெனவும்' என்று மேல்வந்த ஆருயிர்ச்செயலை இரட்டுறமொழிந்து 'இருவேறுலகினும்... மாதொரு கூற’ னென்னும் இவ் இறைவன் செயலுக்கு உவமித் தலுஞ் செயற்பாலது. உடம்பையியக்கும் உயிரை உலகுயிர்களை யியக்கும் இறைவனுக்கு உவமைகாட்டும் முறை.

“கட்டு முறுப்புங் கரணமுங் கொண்டுள்ள மிட்டதொரு பேரழைக்க வென்னென்றாங் கொட்டி யவனுளமா கில்லா னுளமவனா மாட்டா தவனுளமா யல்லனுமா மங்கு”

என்று ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனாரருளிச்செய்த சிவஞானபோத வெண்பாவிற் காணப்படும்.

னிக் ‘கண்ணெனவும்’ ‘மணியெனவும்’ ‘பாவையை யெனவும்' என்பவற்றையும் இங்ஙனமே உவமித்துரைக்கலாமோ வெனின், திருவொற்றிமாநகர் மாதொரு கூறனைத் தொடர்ந்து, ‘முதல்வன்' என்ற முருகவேளைத் தொடராதொழியுமாகலின், அவ்வாறுரைத்தலாகாது.

இனி ‘விளக்கு' மென்பதை முதல்வனுக்குக் கூட்டி முடித்து மாலோவெனின், உலகுயிர்களுக்கெல்லாம் அறிவுந் தொழிலும் விளக்கும் மாதொரு கூறனுக்கே ஓமெனு மொருமொழி

ஓதினான் முதல்வனென்னும் பெருஞ்சிறப்பு ஆண்டுப்

பெறப்படாமையின், அதுவும் உரையன்றென்க. மேலும், ‘முதல்வன்’ என்பதன் சொற்பொருளாற்றல் அதன்கட் சிறவாமையும், அதனால் அதனைப் பெய்து நிறுத்திய அடிகளின் கருத்து ஆண்டு நிரம்பாமையுங் கண்டுகொள்க.

(54-58) செல்லல் உற்று அழுங்கிய மல்லல் தேவர் குழாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/98&oldid=1586837" இலிருந்து மீள்விக்கப்பட்டது