உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

என்பதனொடு கூட்டுக.

மறைமலையம் - 20

பண்பு, உயிர்ப்பண்பைக் காட்டும் நுண்ணிய செயல்கள், மேவி. உயிரின்வினை; அது, பாவை, ‘பாவையினகத்து மேவி அது இயங்க மிக்கது புரியும் ஆருயி ரென்க.

‘தக்கவாறு மிக்கதுபுரியும்' என்றது நேரத்திற்கு இசைந்த வாறு செய்யும் உயிரின்திறத்தை; எனவே 'பண்பு' உயிரின் பல்வேறியற் கையினை யுணர்த்திற்று. 'மிக்கது' அறிவின் சிறப்பைக் காட்டிற்று. 'மிக்கது’ ஒரு தொகுதிப்பட்ட சிறந்த செயல்களை யுணர்த்துதலின் ஒருமைப் பன்மை மயக்கம்.

உயிர், விழைவு அறிவு செயல்கள் (இச்சா ஞானக்கிரியை) பல உடையவாதல்பற்றி "ஓரியல்பில்லா ஆருயிர்' என்றார்.

-

(51-53) இருவேறு உலகினும் உயிர்ப்பொருள் உலகம் உயிரில் பொருள் உலகம் என்னும் இரண்டு வேறுபட்ட உலகங்களிலும், இரண்டு அற விரவி - அவை வேறு தான் வேறு என இரண்டாய்ப் பிரிந்து நிற்றல் இல்லையாம்படி அவற்றோடு ஒருங்கு கலந்து, அறிவும் தொழிலும் நெறி உறவிளக்கும் மாது ஒரு கூறற்கு உயிர்களின் அறிவையும் உயிரில்லனவற்றின் செயலையும் முறைபொருந்த விளங்க வைக்கும் உமையம்மையை யொருபாகமா வுடைய சிவபிரானுக்கு, ஓதிய முதல்வன் ஓமெனும் ஒருமொழி L மறைப்பொருளை ஓதியருளிய ய முதற்கடவுள்,

-

இருவேறுலகு; அறிவுள்ள உயிர்த்தொகையும் அஃதில்லா மண் நீர் தீ முதலான உயிரில் பொருட்டொகையும்,

விரவி

'இரண்டறவிரவி' யென்றார், கலப்புத் தன்மையால் ஒன்றாயும் பொருட்டன்மையால் பொருட்டன்மையால் இரண்டாயும் யும் ஒன்றென்றும் இரண்டென்றுங் கூற முடியாமைக் கலந்து நிற்றலின்; இவ்விரவுதலையே 'இரண்டன்மை’ (அத்துவிதம்) என்று சைவசித்தாந்த நூல் கூறும்.

இறைவன் அம்மையின் வாயிலாகப் பிரிப்பின்றி நின்று இவற்றை விளக்குதலின், அவனை ‘மாதொரு கூற’னென்று விதந்தார்.இங்கு அம்மையொன்றது அருள்.

விளக்குங் கூற னென்று கொள்க.

இவ்வடிகள்,

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/97&oldid=1586836" இலிருந்து மீள்விக்கப்பட்டது