உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

71

- ஊர். “வில்லுடை வைப்பின்" என்னும் பெரும்பாணாற்றுப் படையிற் காண்க (82).

ருப்பவும் வைகவும் சேரவும் நிற்பவும் மறியவும் துள்ளவும் வீசவும் உலாவவும் சேரவும் மயங்கிய மரபின் நிலவுறு வைப்பின் நகரென்று முடிக்க; இருப்பவும் முதலாயின உம்மையேற்ற வினையெச்சங்கள்.

இதுகாறும் மருதத்துக்கும் நெய்தலுக்குந் திணைமயக்கம் கூறுமுகத்தால், திருவொற்றியூரின் சிறப்புக் கூறப்பட்டது.

எனவே, திருவொற்றியூ ரென்பது வயல் வளம் வாய்ந்து கடற்கரை யோரத்தில் அமைந்திருக்கு முண்மை இதனாற் பெறப்படும்.

(44 - 46) உற்ற கண் எனவும் - பொருந்திய கண்ணெனவும், அக்கணின் உள் வளர் அரு மணி எனவும் ப - அக்கண்ணின் உள்ளே ஒளிவளரும் அரிய கருமணியெனவும், அம்மணி உள் உறை பாவையை எனவும் - அக்கருவிழியினுள்ளே உறையும் பாவை யெனவும்,

பாவையை, ஐ சாரியை; "இறவரையும்பர்” என்னுந் திருக் கோவையாரிற்போந்த 'குறவரை யார்க்கும்' என்பதற்குப் பேராசிரியர் கூறிய வுரையைக்காண்க.

இறைவனை முதன்மையும் அருமையும் நோக்கி இங்ஙனங் கண்ணெனவும் மணியெனவுங் கூறினார். இங்ஙனமே “கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்' (திருவாவடுதுறை) என்று அப்பர் பெருமானும் அருளிச்செய்தனர். ‘அருமணி’ யென்றது கருமணியேயா மென்பதும் இதன்கட் பெறப்படுதல்

காண்க.

ஒற்றியமாநகர்க்குக் கண்ணெனவுமென்று தொடர்க.

-

-

(47-50) பாவையின் அகத்துப் பண்பு பலகாட்டி மேவி அப்பாவையிலுள்ளே இயல்புகள் பல விளங்கக் காட்டியுறைந்து, ஆங்கு அது புடை பெயர்ந்து இயங்க - அக் கருவிழியினுள் அது பக்கம் பெயர்ந்து அசைய, தக்கவாறு மிக்கது புரியும் நேரத்திற்குத் தகுந்தபடி சிறந்தது செய்யும், ஓர் இயல்பு இல்லா ஆர் உயிர் எனவும் ஓரியல்பின்றிப் பல்வேறு இயல்புகள் உடை ய அரிய உயிரெனவும், என்றுரைத்து மேல் 'விளங்கும்'

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/96&oldid=1586835" இலிருந்து மீள்விக்கப்பட்டது