உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மறைமலையம் - 20

வளைதுப்பளைநாராற் கட்டிச் சும்மாடெடுப்பராதலின், “கட்டிய சுமட்டி” னென்றார். இதன்கண் இன் என்னும் சாரியை நிற்க ஏழன் உருபு தொக்கது.

பாக்கமென்பது நெய்தல் நிலத்தூர்; பாக்கத்துப் பரத்தியரென்க குமிழ், உவமையாகுபெயர். இடை, ஏழனுருபு.

கொடுத்த பண் ங்கட்கு மாற்றாக மிகுத்துக் காடுத்தமையிற் “பகுத்துணர்வின்றி” என்றார்.

(41-44) மருதமும் நெய்தலும் மயங்கிய மரபின் - இவ்வாறு மருதநிலப் பொருள்களும் நெய்தனிலப்பொருள்களும் ஒருங்கு கலக்குமியல்பினால், உலகம் எல்லாம் ஒருங்கு வந்து உறினும் - உலகத்தாரெல்லாரும் ஒன்றாய் வந்து சேர்ந்தாலும், தொலையா வளத்தொடு-அவர்கள் நுகர்வனவெல்லாம் வழங்கியும் அழியாத வளத்தொடு, நிலவுறும் வைப்பின் ஒற்றி மாநகர்க்கு விளங்குகின்ற ஊரினையுடைய திருவொற்றியூ ரென்னும் பெரிய பட்டினத்திற்கு,

மருதமும் நெய்தலும் ஆகுபெயராய் அவற்றின் கருப்

பொருள்களை

இவையென்பது,

உணர்த்தி

நின்றன.

தெய்வம் உணாவே மாமரம் புள் பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

கருப்பொருள்

அவ்வகை பிறவும் கருஎன மொழிப (தொல். அகத். 18)

என்னும் சூத்திரத்தாற் றெளியப்படும். இச்சூத்திரத்தான் நுவலப் படாவாயினும், இங்கு அடிக ளெடுத்தாண்ட நீர்வாழ்வனவும் வளி நிலையும் பூவும் நிலமக்களும், ‘அவ்வகைபிறவு’ மென்பதனால் அடக்கிக் கொள்ளப்படும். என்னை? 'பிறவு மென்றதனால் நிலமக்களும் நீர் நிலையும் வார்கொடியும் பூவுங் கொள்ளப்படு மென்று அடியார்க்கு

சிலப்பதிகாரப்பதிக உரையிற் கூறினாராதலின்.

‘மயங்கிய மர’ பென்றது, திணைமயக்கம். மக்களுலகு; அன்றி ஆகுபெயரென்றலும் பொருந்தும்.

நல்லார்

உலகு,

'தொலைதல்’ "முன்பு உண்டாய்ப் பின்பு இல்லை யாதலாம்" என்பர் நச்சினார்க்கினியர் (பாலைக்கலி, 1). வைப்பு

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/95&oldid=1586834" இலிருந்து மீள்விக்கப்பட்டது