உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

69

காண்டுபோய், அங்கு அடுத்து உயர் பாக்கத்து அவ்விடத்தையடுத்து மணன்மேடாய் உயர்ந்துள்ள செம்படவர் சேரியில், குமிழ் இடை உகளும் அமைவிழிப் பரத்தியர் - குமிழம் பூவை யொத்த மூக்கின் அடியிற் புரளும் அமைந்த விழிகளையுடைய நெய்தல் மகளிர், பகுத்து உணர்வு இன்றி மிகுத்துக் கொடுத்த - இவ்வளவுக்கு இவ்வளவு என்று பிரித்து உணரும் உணர்ச்சியில்லாமல் மிகுதியாய்க் கொடுத்துவிட்ட தரளமும் மீனும் நிரல்பட அளந்து கொண்டு - முத்துக்களையும் மீன்களையும் தாம் விற்ற பண்டங் களுக்கு ஒழுங்காக அளந்தெடுத்துக் கொண்டு, உவப்பொடு பெயர்ந்து தம் இருக்கை சேரவும் - தாம் மிகுதியாய்ப்பெற்ற மகிழ்ச்சியொடு திரும்பித் தம் இருப்பிடம் அடையவும்,

மொழி செவ்வாய் முகம் என்பவற்றிற்கு உம்மை விரித்தலு மாம். தேம் மொழி' என்பதற்குத் 'தேனனைய மொழி' யென்றும் பொருளுரைப்பர்.

'காமரு' என்பதைக் காமம் மரு எனப் பிரித்து விருப்பம் பொருந்திய அல்லது விருப்பம் மிகுத்தற்குரிய எனப் பொருளுரைக்க; இனிக் “காமரு குவளை” யென்பதற்குக் ‘காமம் மென்பது விகாரத்தாற் காமருவெனநின்று விருப்பம்வரு மென்பதாயிற்று' என்று ஆசிரியர் அடியார்க்கு நல்லார் உரைத்தார் (சிலப்பதிகாரம், அந்தி. 40).

வரு

கொழுமை, சுவைமிகுதிமேற்று. பழன், ஈற்றுப் போலி,

செய், விளைநிலம்; இது பொதுப்பெயர்; புன்மை சிறுமையாதலின், விளைச்சலிற் சிறுமையுடைய புலம் 'புன்செ’ யாயிற்று; விளைச்சலிற் பெருமையுடையது 'நன்செய்’, தன்கண் நன்மைபெருமைப் பொருளது. 'பல்' லென்னும் மொழியைப் பயற்றுக்குங்கூட்டுக. பச்சைப்பயறு. கருமையுழுந்து, பழுப்புக்கடலை, சிவப்புக்கொள்ளு, வளுப்புமொச்சை முதலிய பலநிறப்பயறுகள் உளவாதல்

அடை

காண்க.

'வட்டிகை' கூடைக்குப் பெயராதலை, “வட்டிகை கூடை யென்னும் பிங்கலந்தையாலறிக.

வயல்மேல் வினைசெய்வார் வைக்கோற் றாளைச் சுருட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/94&oldid=1586833" இலிருந்து மீள்விக்கப்பட்டது