உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் - 20

இங்கு வாளாவாரிக் கொள்ளல் என்னும் பொருளில் வந்தது; இவை ஒருசொன்னீர்மைய.வடமொழி உபசர்க்கங்' களைப்போலத் தமிழ் மொழியிலுங் 'கை' யென்பது, உரிய பெயர் வினைச் சொற்களோடு இயைந்துவரும் இடைச்சொல்லாய் நிற்கும். “களித்தறியே னென்பது கைவிடுக' வென்பதிற்போல, (திருக்குறள் 93, 8).

‘பூத்தல்’

பொலிவுபெற்றுத்தோன்றல்: 'மீன்பூத்தன்ன தோன்றலர்” (திருமுருகாற்றுப்படை,169).

கடற்காற்று குளிர்ச்சியு மினிமையு முடைமையால், அவ்வினிமை யதன் ‘பண்பொடு' மெனச் சுட்டப்பட்டது.

'நிமலன்' மலமில்லாதவன்; அவன் சிவபெருமான்; ச்சொல்லின் முதலில் இன்மைப்பொருளை யுணர்த்தும் ‘நிர்’ என்னும் வடமொழியிடைச்சொல் (உபசர்க்கம்) ஈறு கெட்டுப் புணர்ந்தது.

ஈது

சீர்

அடிகள் சிவபிரான் மாட்டு இடையறா அன்புசெலுத்துஞ் சைவப் பெரியாராகலின், தமது அன்பிற்குரிய பொருளைக் கைதையந்தாது படிந்த செந்தாமரை மலருக்கு உவமை கூறினார்; அன்புமிக்கார்க்கு இயல்பேயாம். தொண்டர் பரவுவாரான ஆசிரியர் சேக்கிழார் கைதையந்தாது படிந்த கமலவண்டிற்கு நீறுபுனைந்த தொண்டரை உவமை காட்டிக் கமல வண்டலர் கைதைத், துன்று நீறுபுனை மேனியவாகித் தூயநீறுபுனை தொண்டர்களென்னச், சென்று சென்று முரல்கின்றன" வென் றருளிச்செய்யும் அருண்மொழியிலும் இவ்வியல்பினைக் காண்க

66

-

-

-

(31-40) தேம் மொழிச் செவ்வாய்த் திருமுக உழத்தியர் இனிய மொழிகள் நிரம்பிய, சிவந்த வாயினையுடைய அழகிய முகம் வாய்ந்த உழவர் மகளிர், காமரு கொழும் சுவை வாழையின் பழனும் விருப்பம் மிகுத்தற்குரிய மிக்க சுவையினையுடைய வாழையின் பழங்களும், புன்செய் பயந்த பல் நிறப் பயறும் கொல்லையில் விளைந்த பலநிறங்கள் வாய்ந்த பலவகைப் பயறுகளும் நன்செய் பயந்த பொன்நிற மணியும் - வயலில் விளைந்த பொன்னிறம் வாய்ந்த நென்மணிகளும், வட்டிகைப் பெய்து - கூடையிற் கொட்டி கட்டிய சுமட்டின் எடுத்துச்சென்று வளைத்துக் சும்மாட்டின்மேல் எடுத்துக்

கட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/93&oldid=1586832" இலிருந்து மீள்விக்கப்பட்டது