உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை *

க்

67

கோழிமுட்டையை உடைத்தாற்போல, வெள் அயிர்க் கானல் கொள்ளையின் வீசவும் வெள்ளிய நுண்மணலையுடைய கடற்கரைச்சோலையில் மிகுதியாய்த் தூவவும்,

'முழுநெறி' முறுக்குவிடாமுழுக்கட்டுடைய பூமொட்டு. மருதக் காற்றாகலின்

நிலவளமுடைய

நீர்வள கொழுங்கால்' எனப்பட்டது.

துகள், இங்கு மகரந்தப்பொடி; அது பொன்னிறமா யிருத்தலின், ‘பொலந்துக’ளென அடை கொடுக்கப்பட்டது.

கோழிமுட்டையை உடைத்தக்கால், மஞ்சட்கரு விரவிய வெண்குழம்பே நிலத்தின்கட்பரவுதலின், அது தாமரைப்பூவின் மஞ்சட் பொடியினை வெண்மணலிற் சிதறுதற்கு உவமை யாயிற்று.

ஆங்கு’ உவமச்சொல் லென்றார் பரிமேலழகர் (திருக்குறளுரை, 2: 5).

‘அயிர்’ நுண்மணலுக்குப் பெயராதலை "இடிக்கலப் பன்ன ஈர் அயிர்” (சிலப், 6 : 146) என்று ஆசிரியர் இளங்கோவடிகள் ஒருவமையின் வைத்து உரைத்தார்.

து மருதநிலத்துக் காற்று அந்நிலத்துத் தாமரைமலரின் பூந்தாதுகளை அள்ளிக்கொண்டு நெய்தல் நிலத்துக் கடற்கரைச் சோலையிற்சென்று தூவுதல் கூறிற்று.

(26-30) வெள்ளி வெண் தோட்டுத் தாழையின் அளைஇ வெள்ளித்தகட்டையொத்த வெள்ளிய மடல்களை யுடைய தாழம்பூ வைத்துழவி, கையரிக்கொண்ட கடல் கால் ஓடி அதன் மகரந்தப் பொடியை வாரிக்கொண்ட கடற்காற்று மருத நிலத்துக்கு ஓடி, நீறு மெய்பூத்த நிமலன்போல திருநீறு உடம்பெங்கும் பொலிவுபெறத் தோன்றிய மலத்தின் நீங்கின சிவபெருமானைப்போல, செம்தாமரைகள் சிறந்து இனிது சிவந்த தாமரைப் பூக்கள் நிறஞ்சிறந்து அழகாய்த் தோன்றுமாறு, வெண்பொடி வீசிப் பண்பொடும் உலாவவும் - அவ் வெண்பொடியைச் சிதறி இனிதாய் வீசவும்,

விளங்க

-

'தாழையின்’ இன் சாரியை, கண் உருபு தொக்கது.

-

'கையரிக்கொள்ளல்' கைநிரம்ப அரித்துக்கொள்ளல்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/92&oldid=1586831" இலிருந்து மீள்விக்கப்பட்டது