உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மறைமலையம் - 20

காலெதிர்ந் தோடுங் கழிக்கய’ லென்று பின்வருதலின், இவ்வாளை மீனுங் கால்வழிச்சென்று பாயுமெனக் கொள்க. 'கால்வழியோடிக் கழியிற்சேரவு' மென்று மேலே வந்தமையும் நினைவு கூரற்பாற்று.

'ஒடு' உருபுகள் இரண்டனுள்ளும் முன்னது கலப்புறு பொருளிலும், பின்னது அடைமொழிப் பொருளிலும் வந்தன.

‘முடைக்கழி’ புலால்நாற்ற முடைய கழி; ஏனையெல்லா நீர் நிலைகளினும் உப்பளத்துக்கழியே முடைமிகுதியும் இயல்பி லுடைமையால், முடைநாற்றத்தைக்

இலக்கியங்களெல்லாம்

அம்

மரபு.

கழிக்கே ஏற்றிக்கூறுதல் "புலவுநாறிருங்கழி” யென்று அகப்பாட்டிலும் (180) வந்தது. "புலவுக்கழி” யென்று அடிகளே மேலும் (22 - 109) உரைப்பர்.

இது மருதநிலத்து வாளை நெய்தல்நிலத்துச் சுறவொடு போர் புரிதல் கூறிற்று.

(20-21) கால் எதிர்ந்து ஓடும் கழிக்கயல் - நீர்க்கால்களில் எதிர்முகமாய் ஓடும் நெய்தற்கழியின் கயல் மீன்கள், மருதச்சேலொடு கூடிச்சேர்ந்து துள்ளவும் சேல்மீன்களொடு கலந்து ஒன்றாய்க் குதிக்கவும்,

-

மருதநிலத்துச்

மருதநிலத்து வாய்க்கால்கள் கடற்பக்கம் நோக்கிச் சல்லுமாதலின், அக் கடற்பக்கத்திலிருந்து மருதநிலத்தை நோக்கி ஏகு கயல் மீன்கள் அக்கால்வாய்களை எதிர்ந்து ஓடினவென்றார். எதிர்ந்து, எதிர்த்து; இவ்வன்மை மென்மைகளிற் பொருள்வேறுபாடு உண்டு; முன்னையது திர்முகமாய்ச் செல்லுதலையும், பின்னையது போர்க்கு முனைதலையும்

உணர்த்தும்.

கயலொடு

சேலுந்துள்ளிற்றென்பார், 'சேர்ந்து துள்ளவும்' என்றார்.

இது நெய்தற்கழியின் கயல் மீன்கள் மருதநிலத்துச் சேற்கெண்டைகளொடு சேர்ந்து துள்ளுதல் கூறிற்று.

(22-25) முழுநெறி அவிழ்க்குங் கொழுங்கால் ஓடி - மருத நிலத்து அரும்புகளை இதழவிழ்க்கும் அவ்விடத்துக் கொழுவிய காற்று ஓடிச்சென்று, பொன் அம் தாமரைப் பொலம் துகள் வாரி -பொன்னிறமான அழகிய செந்தாமரைப்பூக்களின் பொன்னிற மான பொடியை அள்ளி, கோழிமுட்டை போழ்படுத்தாங்கு -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/91&oldid=1586830" இலிருந்து மீள்விக்கப்பட்டது