உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

65

'முனைஇய’ வெறுத்த; இஃதிப்பொருட்டாதல் “சேற்று நிலை முனைஇய செங்கட் காரான்” என்னும் அகநானூற்றிற் (4) காண்க. ‘நிலவு’ நிறத்திற் குவமை. 'நண்ணிய பொருந்திய. ‘இவர்ந்தெழு' ஒருசொல் நீர.

‘துணிநீர்' என்பதற்குத் ‘தெளிந்தநீ’ரென்றே ஆசிரியர் நச்சினார்க்கினியரும் "துணிநீர் மெல்லவல்" (மதுரைக்காஞ்சி, 283) என்புழி உரை கூறினார்.

'இரும்புதிரித்தன்ன' வென்பது, மருப்பின் வலிமை யுணர்த்திற்று. இவ்வுவமையை "இரும்புதிரித்தன்ன மாயிரு மருப்பு” என்று குறுங்குடிமருதனாரும் அகநானூற்றில் (46) எடுத்தாண்டார்.

அறல், தொழிலடியாகப் பிறந்தபெயர்.

‘புறமருங்கு’புறமாகிய இடத்தில்; இங்கு மருங்கு என்பது இடப்பொருளுணர்த்தி நின்றது; 'மருங்கின்கண்' என

நிற்கற்பாலது உருபு கெடச்சாரியையுடன் நின்றது;

“மெல்லெழுத்து மிகுவழி" என்னுஞ்சூத்திரத்தில் “மெய்பெற' என்றமையால் இன்னோரன்ன முடிக்கப்படுமென்பர் உரைகாரர் நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், எழுத்து,157).

விசும்பு நீர்க்குளத்திற்கும், முகில் எருமைக்கும், திங்கள் குருகுக்கும் உவமை; எருமைக்குக் கரும்புறங் கூறினமையால், உ அதன் உவமையாகிய முகிலுக்குங் கருமையுரைக்கப்பட்டது.

இது நெய்தல் நிலத்து நாரை மருதநிலத்து வயலெருமை மேற்சென்று நின்றமை கூறிற்று.

-

(18-19) பொறிகெழுவாளை மருதநிலத்து நீர் நிலை களிலுள்ள விளக்கம் அமைந்த வாளைமீன், வெறிபடப் பாய்ந்து முடைக்கழிச்சுறவொடு கறுவொடு மறியவும் - மதர்ப்பினாற் சரேலெனப் பாய்ந்து முடை நாற்றத்தையுடைய கழிக்கணுள்ள சுறாமீனொடு சினத்துடன் புரளவும்,

'பொறி கெழு வாளை' 'ஒளி பொருந்திய வாளை' யெனப் பொருடருதல் “பொறி வரி வரால்" என்புழி (சீவகசிந்தாமணி, 44) நச்சினார்க்கினியருரைத்த உரையாலறியப்படும்.

-

வெறி மதர்ப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/90&oldid=1586829" இலிருந்து மீள்விக்கப்பட்டது