உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் - 20

துணிகள்” என்று அதற்குக் கூறிய உரையாலுந் தெளியப்படும்.

இது, நெய்தல்நிலத்துக் காக்கையும் மீனும் மருதநிலத்துச் சன்றமை கூறிற்று.

-

மருத

(9-11) குளன் உறை வாழ்க்கை வள நீர்க்கோழி நிலத்துக் குளத்தின்கண் வாழும் வாழ்க்கையினையுை உடற்செழுமை வாய்ந்த நீர்க்கோழி, மனையுறை நீங்கித் துணை கூப் பெயர்ந்து - அவ்விடத்து உறைதலைத் தவிர்ந்து தனது பெடைப்பறவையைக் கூவியழைத்துக் கொண்டு, கால்வழி ஓடிக் கழியிற்சேரவும்-வாய்க்கால்வழியாகநீந்திச்சென்று நெய்தனிலத்துக்

கழிநீரிற் சேரவும்.

‘வளம்’ என்பதை நீர்க்குக் கூறுதலுமாம். உறை’ இரண்டனுள் முன்னது வினைத்தொகை, பின்னது முதனிலைத்தொழிற்பெயர். ‘துணை’ இச்சொல் இருபாற்கும் உரித்தேயாயினும், பெரும் பாலும் பெண்பால் மேற்றாகவே வழங்கப்படும்.

'கூப்பெயர்தல்’

பொருட்டாம்.

ஒருசொல்;

அழைத்தலென்னும்

இது, மருதநிலத்து நீர்க்கோழி நெய்தனிலத்துக் கழியிற் சேர்ந்தமை கூறிற்று.

(12-17) புலவு மணம் முனைஇய நிலவுஉறழ் குருகு நெய்தனிலத்துக் கழியில் மிகஇருந்தமையாற் புலால் நாற்றத்தை வெறுத்துவிட்ட நிலவையொத்த வெள்வ கண் அகல் விசும்பில் நண்ணிய முகில்மேல் இவர்ந்துளிய நாரைகள் எழுதிங்கள் இடமகன்ற வானிற் பொருந்திய கரிய முகிலின் மேல் ஏறித் தோன்றுந் திங்களைப் போல, பரந்து கெழு துணிநீர்த் தடத்தின் மணம் மலர் ஆரும் - இடம்அகன்று உள்ள தெளிந்த நீரினை யுடைய மருதநிலத்துக் குளத்திலுள்ள மணங்கமழும் பூக்களை மேய்ந்துகொண்டிருக்கும், இரும்புதிரித்து அன்ன அறல் மருப்பு எருமை கரும்புறம் மருங்கில் இரும்பை முறுக்கினாற்போல் அறுப்பு அமைந்த மருப்பை யுடைய எருமைகளின் கரிய முதுகாகிய இடத்தில், ஒருங்கி நிற்பவும் - கூம்பி நிற்கவும்,

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/89&oldid=1586828" இலிருந்து மீள்விக்கப்பட்டது