உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

63

இது முதல் நாற்பத்தோரடிகாறும் மருத நிலத்திற்கும் நெய்தனிலத்திற்குந் திணைமயக்கங் கூறுகின்றார்.

-

(1 முதல் 4 அடி) நீர் வளம் கவின்ற சீர் வளர் பழனத்து நீர் வளத்தால் அழகுபெற்ற சிறப்போங்கிய கழனியில், நெல் குரல் கவ்விய நல் குரல் பைம் கிளி - நெற்பயிரின் கதிரைக் கௌவிய அழகிய குரல்ஒலியினை யுடைய பச்சைக்கிளி, கானல் காவில் தான் விரைந்து எய்தி - கடற்கரைச்சோலையில் விரைவாய்ப் பறந்துசென்று, பொன்வீஞாழல் பொலிந்து இனிது இருப்பவும் பொன்நிறமான மலர்களையுடைய நாக மரத்தின்மேல் மனஎழுச்சியோடு அழகாய் உட்கார்ந்திருக்கவும்.

‘வளங் கவின்ற' மூன்றாம் வேற்றுமைத் தொகை, சீர் - விளைவின்பெருமை. குரல் - நெற்கதிர்; இது “நெற்கதிரும்... குரலெனமொழிப" என்னும் பிங்கலந்தையா லறியப்படும்.

நிலத்துக்கிளி

இது, மருத சென்றிருத்தல் கூறிற்று.

நெய்தல் நாகமரத்திற்

-

(5-8) கரும் கழி வாரிய பெரு மீன் குவைஇ கரியநிறத் தினையுடைய கழியிலிருந்து வாரியெடுத்த பெரிய மீன்களைக் குவித்து, வல் திறல் பரதவர் முன்றில்தொறும் உணக்கும் - வலிய உடலுரம் வாய்ந்த செம்படவர் தம்முடைய வீட்டு முற்றங்க டோறும் உலர்த்துகின்ற, துடிக்கண் துணியல் கொடிக்குலம் கவர்ந்து - உடுக்கையின் கண்களைப்போல் வட்டத்துண்டு களாயிருக்குங் கருவாடுகளைக் காக்கைக் கூட்டங்கள் திருடியெடுத்துக்கொண்டு, மருதங் காவில் பெரிது வைகவும் மருத நிலத்து இளமரச்சோலையில் ஏகிப் பெருமிதத்துடன் அமர்ந்திருக்கவும்,

திறல் - உடம்பின் உரம்.

உலர்த்துதற்காக வகுந்து வெயிலில் விரித்துவைக்கப் காண்பார்க்கு உடுக்கையின்

பட்டுக்காயும் மீன் கண்களைப்போல் இரண்டு வட்டத்துண்டுகளாய்த் தோன்றுதலால், அது 'துடிக்கட்டுணிய' லெனப்பட்டது. இஃதிவ்வாறு தோன்றுதல் “கொழுமீன் குறைஇய துடிக்கட்டுணியல்” என்னும் மதுரைக் காஞ்சியாலும் (320) ஆசிரியர் நச்சினார்க்கினியர் “துடியின்கண் போலுருண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/88&oldid=1586827" இலிருந்து மீள்விக்கப்பட்டது