உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மறைமலையம் - 20

பெறுவிக்கும் இறைவன் திருவடி நிலையுங் கூறப்படுகின்றமையின், அவைதாம் முறையே பொருளறிவின் விரிவையும், அறியாமை யின் தேய்வையும், அவ்விரண்டையும் பெற்று விளங்குதற்குரிய உயிரின் தகுதியையும், அத்தகுதிக் கேற்ப அது பெறும் பேரின்பப் பேற்றையுங் குறித்து, அவ்வாற்றால் இத்திருவொற்றி முருகர் மும்மணிக்கோவையென்னும் நூலுந் திருவொற்றி நகரைச் சிறப்பிக்குமுகத்தால் உயிரினறிவைப் புறப்பொரு ள்களிற் செலுத்தி அகன்றுவிரியுமாறு செய்து, பின்னர் அம்முகத்தால் அறியாமைதேய்த்து அதன் உணர்வினை நுட்பமாக்கி, இறைவனது பேரின்பத்தினை நுகர்ந்து கிடக்கச் செய்யுமென்னும் முறை தெளிவித்தவாறு.

மேலும், இச்செய்யுள் ‘ஆகும்' என்னும் வினையையே முடிவிற் பெறுதற்குரித்தாயிருப்பவும், ஆசிரியர் அதனைச் ‘சீர்வளர்’ என்பதற்குங் ‘கழல்' என்பதற்கும் இடையே யிட்டு முடித்திருத்தலால், இந்நூலுந் தன்னைப் பயில்வார்க்கு ம்மைப்பயன்களை முற்றுந் தந்து இறுதியில் இறைவன் திருவடிப்பேற்றைப் பயக்குமெனப் பயன் கூறியவாறாயிற்று.

இவ்வாறெல்லாங் காப்புச் செய்யுளென்பது நூலின்

கட்காணப்படும்

நூலமைதிகளையும் பொருட்கூறுபாடுகளையும் பயன் முதலிய பிறவற்றையு மெல்லாங் குறிப்பாற் றன்கட்கொண்டு விளங்குதல் அதுதனக்கு இலக்கணமாமென்க. ஆசிரியர் சிவஞானமுனிவருந் தமது சிவஞானபோதமாபாடியத்து மங்கலவாழ்த்துச் செய்யுளின் உரையிறுதியிலும் இங்ஙனம் நூனுதல் பொருளெல்லாங் குறிப்பாற் றன்னகத் தடக்கிநிற்றல்

66

மங்கலவாழ்த்துக்கு

இலக்கணமென்றுணர்க' என்று உரை கூறினர். கடவுள் வணக்கமென்பதும் மங்கலவாழ்த் தென்பதும்

ஒருபுடையொப்புமையுடைய.

1. செஞ்சொடு கிளத்தல்

"நெஞ்சொடு கிளத்தல்” என்பது தன் தலைவன் பெருமையும் அவன்றன் அருளுருவை நினைதலால் தனக்கு ளையும் நன்மையுந் தலைவி தன் நெஞ்சிற்கு எடுத்துக்கூறல்; இம்முறையினை 'நெஞ்சறிவுறூஉ' வெனவும் வழங்குப.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/87&oldid=1586826" இலிருந்து மீள்விக்கப்பட்டது