உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை எனத்தன்வினையாற் கூறினார்; ஆல், அசை.

‘கைம்மா” கையையுடைய விலங்கு; அஃது யானை.

‘அது கழல் ஆகும்' என்று வினை முடிக்க.

61

எடுத்துக்கொண்ட நூல் இனிது முடியுமாறு முதலிற் காப்புச் செய்யுள் கூறுதல் நூலாசிரியர்க்கு மரபாதலின், அடிகளும் இச்செய்யுளாற் காப்புக்கூறினர். பிற்கால வழக்கு யானைமுகக் கடவுள் மேல் நிற்றலின் இச்செய்யுளும் அவரையே பரவிற்று.

இப்பாட்டு நேரிசை வெண்பா. இது 'நீர்' என்பது முதற் ‘கழல்' என்பது இறுவாயாக முப்பது சொற்களாற் கூறப்படு தலால், இந்நூலும் முப்பது பாட்டுக்களா லாக்கப் பட்டதென்பது குறிப்பு. இதன்கண் இல் கு ஆல் என்னும் கு வேற்றுமை யுருபுகளும் ஏனைச் சொற்களொடு சேர்த் தெண்ணப்பட்டன. என்னை? அவ்வுருபுகள் தாமுஞ் சொற்களோடொப்பப் பொருளுணர்த்துத லுடைமையி னென்பது. அற்றாயின், அன் அ முதலிய பெயர் வினை விகுதிகளும் பொருளுணர்த்துத லுடைமையின், அவை தாமும் அவ்வுருபுகளைப் போலச் சொற்களொடு சேர்த் தெண்ணப்படல் வேண்டுமா லெனின், அற்றன்று, ஒரு சொற் றொடரினிடையே இல் கு ஆல் முதலிய வேற்றுமையுருபுகள் சொற்களினுள் நின்றும் பொருளுணர்த்துதற் கட் பிரிந்திசைத்தல் போல், அன் அ முதலிய பெயர் வினை விகுதிகள் அங்ஙனம் பிரிந்திசையாமையின், அவ் விகுதிகள் சொற்களொடு சேர்த் தெண்ணப்படுதற்கு உரியனவல்லவென்

றுணர்ந்துகொள்க.

இனி, இக்காப்புச்செய்யுள் ‘நீர்' என்னுஞ் சொல்லை முதலாகவும், 'கழல்' என்னுஞ் சொல்லை இறுதியாகவுங் கொண்டு விளங்கலால், நூலும் அவ்வாறே ‘நீர்' என்பதை முதலிலுங் ‘கழல்' என்பதை இறுதியிலுங் கொண்டு விளங்கு மென்பதூஉங் குறிப்பா னுணரப்படும்.

இன்னும், இப்பாட்டின் முதலடியில் திருவொற்றிநகர்ச் சிறப்பும், இரண்டாமடியிற் சூரனழிவும், மூன்றாமடியில் தாமும் பிறரும் பயன் பெறுமாறும், நான்காமடியில் அவரைப் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/86&oldid=1586825" இலிருந்து மீள்விக்கப்பட்டது