உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

ஓம் சிவம்

திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை உரை

காப்புச் செய்யுள்

-

நீர் வளம் நன்று ஓங்கும் திருவொற்றி நீள் நகரில் - நீர்வளம் பெரிதும் ஓங்குகின்ற திருவொற்றியூ ரென்னும் புகழால்நீண்ட பட்டினத்தில் திருக்கோயில் கொண்ட சூர்வளம் தின் வேலோற்கு - சூர்மாலினது செழுமையைத் தின்ற வேற்படையை யுடைய முருகக்கடவுளுக்கு, தூயநூல் 'முன்னமணிக் கோவை’ யென்னும் இக்குற்றமற்றநூலை, சீர் வளர - சிறப்போங்கும்படி, எம்மால் இயற்றுவது ஒன்று உண்டு - எம்மைக்கொண்டு செய்வது ஒன்று உள்ளது, அது கைம்மா முகத்தன் கழல் ஆகும் - அங்ஙனஞ் செய்யுங் கருவி யானைமுகக் கடவுளின் திருவடி யாகுமென்க.

'நன்று' பெருமைப்பொருளது; “நன்று பெரிதாகும்" என்னுந் தொல்காப்பியத்திற் காண்க.

‘சூர்வளந்தின் வேலோன்' என்பது, சூரனுடைய வலிமை செல்வம் முதலியவைகளை அழித்த வேலோ னென்னும் பொருட்டு; உடையோன் றொழில் உடை லேற்றப்பட்டது.

மைமே

'தூயநூல்' தூயனாகிய முருகக்கடவுளைப் பாடுதல்பற்றி இந்நூல் தூய என அடைகொடுக்கப்பட்டது.

இந்நூலைப்பாடும்

ஆக்கியோற்கும்

இதனை

ஓதுவார்க்குஞ் சிறப்புண்டாக என்னும்பொருட்டுச் ‘சீர் வளர’ வென்றார்.

‘எம்மால்’ஆல் கருவிப்பொருளில் வந்தது.

ஆசிரியர் இந்நூலைத் தம் முனைப்பின்றி இறைவன் வழியாய் நின்று அவனியற்ற இயற்றுகின்றமையின், இயற்றுவது

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/85&oldid=1586824" இலிருந்து மீள்விக்கப்பட்டது