உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் - 20

கோட்பாடுகளைக் கக்கி எங்கும் இருளைப்பரப்பி, மெய்தரு சைவ நல்நெறி பிழைப்ப - மெய்மைபொருந்திய சைவம் எனப்படும நல்வழிதவறி, மாணாவழிப்படூஉம் கூன்பாண்டியன் முதல் சிறவாத தீயவழியில் அகப்படுங்கூன்பாண்டியன் முதலான, ஆறுசெல் மாக்களைச் சூறைகொண்டு எறிந்து வழிச்செல்லும மாந்தரை வழிபறித்து ஊறுசெய்து, பெரும்துயர் உறுக்குங்காலை - மிக்க துன்பத்தை விளைக்கும்பொழுது;

-

கூடலில் தமிழ்ச்சங்கங்கள் நிறிஇப் புலவர்பெருமக்கள் தமிழாராய்ந்து வந்தனராகலிற் ‘பீடுயர் செந்தமிழ்க்கூடல்’ என்று மதுரை சிறப்பிக்கப்பட்டது. மதுரைக்கு உரிய ஏனைச் சிறப்புகளினுந் தமிழாராய்ந்தசிறப்பே அதற்குப் பெருஞ் சிறப்பாகும். கூடன்மாநகரில் தமிழாராய்ந்த பெருமையை மாணிக்கவாசகப்பெருமானும் “உயர்மதிற் கூடலினாய்ந்த ஒண்டீந்தமிழ்” (திருக்கோவையார், 20) என்றருளிச் செய்தல்

காண்க.

சமண்கோட்பாடுகள்

'பொய்படு புண்பொரு' ளெனப்பட்டன, அவை கடவுட்கோட்பாட்டின் வழிப்படாமை யின்; அங்ஙனமே சைவ சமயமும், 'மெய்தருசைவ' மெனப் பட்டது; என்னை, அது கடவுட் கோட்பாட்டையே தனக்கு உயிரெனக்கொண்டு நிற்றலினென்பது.

என்றுரைத்தமையிற்,

சமணரை முன் 'முரம்பு' சைவசமயங்கள் ஆறுசென்மாக்க’ ளெனவும், அவர்கள் சைவமொழுகுதலைத் தடைசெய்து நெறியல்லா நெறிபுகுத்தி ஊறுசெய்தல் 'இருள்பரப்பி நெறிபிழைப்பச் சூறைநொண் டெறித' லெனவும் ஏற்றபெற்றி இங்கு உருவகஞ்செய்யப்பட்டன. இனி 'முரம்பின் (13) துயருறுக்குங்காலை (29)’ யென வினைமுடிவுசெய்தல் ஒக்குமெனின், அஃதமையாது; ஏனென்றால், 'பின்செலு மடவார் (11) குழையுமுரவோர்க்கு (22)’ உவமை யாதலினென்பது.

(29-36) அருந்தவம் நின்பெறுபொருளின் பல்பகல் ஆற்றி - நின்னைத்தமக்கு மகவாகப்பெற்றெடுக்கும் நோக்கத்தால் அரியதவத்தைச் 'சிவபாதவிருதயர்' பலநாளும் இயற்றி, வேண்டிய பெரியோர்க்கு வேண்டியாங்கு அளிப்ப விரும்பிய சான்றோர்க்கு அவர் விரும்பியவாறே வேண்டுவன F•T• UI,

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/129&oldid=1586873" இலிருந்து மீள்விக்கப்பட்டது