உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

105

கருக்குழிக்கிடக்கும் தன்மையை அன்மையின் - கருப்பை என்னுங் குழியிற்கிடந்து வருந்தும் இயல்புடையை அல்லையாகலின், உருப்பெற வருகுநை போல - உருவுண்டாக இம்மண்ணுலகில் எழுந்தருளுவோய்போல அவர் அகத்து ஒரு பெருமாயம் பெருகுறச்செய்து அவர் மாட்டுக் கருவிலமர்ந்தாற்போல் ஒருபெரிய மாயச்செய்கையை மிகவஞ் செய்துகாட்டி, புறம் பெயர்ந்து எய்தி - அவர் மடியகத்தினின்றும் வெளிப்போந்து வந்து, அறம் தரு பெருமைச் சண்பையில் தோன்றினை அறத்தைப் பிறர்க்கு அருளும் பெருமையினை சண்பையென்னுந் திருப்பதியில் தோன்றியருளினை;

யுடைய

ஆற்றி’

பகல், நாள்; ஆற்றலோடு இயற்றுதலின்; யெனப்பட்டது. ‘அவ' ரென்றது, இங்குச் 'சிவபாதவிருதய’ரும் அவர்தங் கற்பிற் சிறந்த காதன் மனைவியார் பகவதியாருமென்க. வினையினீங்கிய முழுமுதலிறைவனான முருகப்பெருமான் பிறவியுட்படும் இயல்பினன் அல்லனாகலிற், பகவதியார் மணிவயிற்றிற் கருத்தங்கி உருப்பெற்றது ஈண்டு ஒருமாயமாகக் கிளந்துரைக்கப்பட்டது. எல்லாம் வல்ல முருகப்பெருமானே திருஞானசம்பந்தராய்ப் பிறந்தருளினாரென்பது புராணவழக்கு. “பூதல மதனிற் காழிமா நகரிற் புண்டரீ கன்றடத் தொருசார்

மாதவம் புரிவோன் முன்னிளங் கதிர்போன் மதலையாய் வந்தனன் கந்தன்”

என்று சீகாழித் தலபுராணம் 'திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவவதார வத்தியாயத்தில்' (6) இங்ஙனங்கூறுதல் காண்க. ‘புறம்பெயர்ந்’ தென்பது, ஈண்டுப்பிறத்தல்.

‘சண்பை யென்றது ‘சீகாழி’யை, சீகாழிக்குரிய பன்னிரண்டு திருப்பெயர்களிற் ‘சண்பை' யென்பதும் ஒன்றாதல் "சண்பைநகர் வளர்காழி" (திருஞானசம்பந்தர் புராணம், 14) திருத்தொண்டர் புராணத்தாலறியப்படும்.

‘மாது, ஓ’அசைகள்.

(36

-

40) பின்பு

அங்ங வனந்தோன்றிய பின்னர் மூன்றாமாண்டி லொருநாள், கிண்கிணி ஒலிப்பத் தந்தைபின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/130&oldid=1586874" இலிருந்து மீள்விக்கப்பட்டது