உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

  • மறைமலையம் - 20

சென்று - சதங்கை ஒலி செய்யத் தம் தந்தையின்பின்னே போய், தண் கழுநீரும் செந் தாமரையும் ஒருங்கு தலைமயங்கிய பெரும் தடமருங்கின் - குளிர்ந்த கழுநீர் மலரும் சிவந்த தாமரைமலரும் ஒன்றாய்க்கலந்து விளங்கிய அகன்ற திருக்குளத்தின் கரைப்பக்கத்தில், அரும்பெறல் தந்தையைத் தலைக்கூடினை பெறலரிய தந்தையினை எதிர்ப்பட்டுக் கூடியருளினை.

பெயர்.

'கிண்கிணி' ஈரடுக்கொலிக்குறிப்பினால் வந்த காரணப்

‘ஒருங்கு தலைமயங்குத' லாவது, ஒன்றோடொன்று பிரிவு தோன்றாமற் கலத்தல்.

தடமருங்கு, கரை; மருங்கின்கண் என நிற்கற்பாலது மருங்கி னெனச்சாரியைநிற்க உருபுகெட்டது.

-

தந்தையென்றது, ஈண்டு இறைவனை; திருஞானசம்பந்தரை முருகப்பிரானென் றுரைத்தலின், அவர்க்குச் சிவபிரான் தந்தை யெனப்பட்டார்; மேலும் இங்ஙனமே கொள்க.

‘தலைக்கூடுதல்', என்பது ஓரிடத்து ஒருங்குகூடுதல்.

(40-48) அதற்புறம் அதன்பிறகு, முருந்துஉறழ் வெள்நகைப் பெரும்பெயர் அன்னை- மயில் இறகினடிமுள்ளைப்போலும் வெள்ளிய பற்களையுடைய பரிய

புகழ்மிக்க திருவருட்டாயான உமைப் பிராட்டியார், கரும்பும்கனியும் பெரும்சுவைப்பாலும் திருந்தியதேனும் ஒருங்குறக்கூட்டி கருப்பஞ்சாறும் பழச்சாறும் மிக்கசுவைபொருந்திய ஆவின்பாலுந் தெளிந்ததேனும் ஒன்றாய் விரவச்சேர்த்து, குழைத்து எடுத்து அன்ன இளகுபதமாய்க்

காய்ச்சியெடுத்தாற்போல, விழைவுஅறா மரபின் முலைபொழி அமிழ்தம் வள்ளத்து ஊட்ட - வேட்கைதீராத சுவைத் தன்மையினையுடைய தமது திருமுலையிற் சுரந்தொழுகிய பாலைப் பிராட்டியார் பொற்கிண்ணத்தினால் ஊட்ட பவளவாய் மடுத்துத் திவள் ஒளி சிறந்து - தமது பவளம்போன்ற செவ்வாயினால் உட்கொண்டு அசையும் ஒளியால் மிகுந்து, பழகுறு தந்தைக்கு மழவிடை அமர்ந்த தந்தையைத் பழகுதல் பொருந்திய தந்தையாரான சிவபாதவிருதயருக்கு இளைய ஏற்றின்மேல் எழுந்தருளிவந்த

தாயொடும்காட்டி

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/131&oldid=1586875" இலிருந்து மீள்விக்கப்பட்டது