உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

107

உரியதந்தையாரான சிவபெருமானை அம்மையொடுஞ் சுட்டிக் காட்டியருளி;

66

முருந்து, பற்களின்

ண்மைக்குங் கூர்மைக்குஞ்

சிறுமைக்கும் உவமை; இஃதிவ்வாறு உவமிக்கப்பட்டுவருதல், முருந்தேரிளநகை” (துயிலெழுப், 88) என்னும் மணிமேகலை யானும், “முருந்தேய்க்கு முட்போலெயிற்றினாய்” என்னும் ஏலாதி (8) யானும் அறியப்படும்.

'பெயர்', இங்குப் புகழ்; “பெரும்பெயர்த் தலைத்தாண் மன்பெருஞ்சிறப்பின் மாநிதிக்கிழவன்” என்னுஞ் சிலப்பதி காரத்திற் (16: 84) போலவென்பது.

குழைத்தெடுத்தலாவது, குழையக்காய்ச்சி யெடுத்தலென்க. ‘வாய்மடுத்தல், உண்ணுதல்; “மதியுணரமகளென வாம்பல் வாய்மடுப்ப" வென்னும் பரிபாட லடியினும் (78) ப்பொருண்மை தெளியப்படும்.

'திவளொளி', அசையும் ஒளி; "நிலந்திவௗ” என்னுஞ் சிந்தாமணி (3022) யாற்பெறப்படும்.

சிவபாதவிருதயர் பழகுறு தந்தையெனப்பட்டார், அவர் சிறிது காலம் மட்டுமே தந்தையென உறவு பயிறலின்; அடிகள் சிவபெருமானை வாளாத் தந்தையெனக் குறித்தல்கொண்டு, திருஞான சம்பந்தர்க்கு

அவரே

தந்தையாராவரென்பது இனிதுணரப்படும்.

-

உரிமைத்

-

-

(48-51) பின்றை பின்பு, காண்தகு திருவிளையாடல் காண்டற்குத்தக்க செயற்கருஞ்செயல்களை, மாண்தக மாட்சிமையுண்டாக, செய்திறம் அறியார் உய்திறம்நோக்கி தவஞ்செய்தற்குரிய வகைகளைத் தெரியாதவர்கள் உய்யும் வகைகருதி, பல்பகல் இயற்றியபின்னர் பற்பலநாட்கள் செய்தருளியபின்;

அளந்துகாண்டற்குரிய

-

காண், முதனிலைத்தொழிற்பெயர்; திருஞானசம்பந்தர் செய்தருளிய திருவிளையாடல்கள் ஒவ்வொன்றும் அறிவான் அருமைபெருமை ம 6 வாய்ந்தனவா மென்றற்குக் ‘காண்டகு' வென அடைகொடுத்தோதப்பட்டது. “காண்டகு சிறப்பிற் கண்ணகி” யென்னுஞ் சிலப்பதிக ரத்துக்கு (2, 90) உரைகாரர் அடியார்க்கு நல்லார் 'காட்சிதகுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/132&oldid=1586876" இலிருந்து மீள்விக்கப்பட்டது