உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் - 20

சிறப்பினையுடைய கண்ணகி' யென்றுரைத்ததூஉம் இங்கு உற்றுநோக்கற்பாலதாகும்.

பிள்ளையர் செய்த திருவருட்செயல்கள் பிறர்க்கெல்லாஞ் செயற்கருஞ் செயல்களேயாயினும், அவர்க்கவை எளியவாதல் பற்றி, அடிகள் அவற்றைத் 'திருவிளையாட’ லெனச் சுட்டி மகிழ்ந்தார். அவையாவன; 'பொற்றாளம் பெற்றமை, முத்துச்சிவிகையும் முத்துக்குடையும் முத்துச்சின்னங்களும் பெற்றமை, கொல்லிமழவன் புதல்விக்கு முயலகநோய் தீர்த்தமை, குளிர்காய்ச்சல் நீக்கியருளினமை, முத்துப்பந்தர் நிழற்றப் பெற்றமை, ஆயிரம்பொன் அடைந்தமை, வணிகனுக்குப் பாம்பின்நஞ்சு தீர்த்தமை, வாசிதீரக் காசு பெற்றமை, திருமறைக்கதவு அடைத்தருளினமை முதலியன. இவற்றை யெல்லாந் திருஞானசம்பந்தர்வரலாறு கூறுந் திருந்தொண்டர் புராணத்துட் கண்டுகொள்க.

‘உய்திறம்’ என்றவிடத்துத் திறம் வகை என்னும்பொருட்டு.

(51-53) முன்படர்ந்து - முன்விரைந்துசென்று, அருந்தமிழ் ஆய்ந்த பெரும்தமிழ்க்கூடல் - அரிய செந்தமிழ்ச் சங்க மிருந்து ஆராய்ந்த பெரிய தமிழ்வளம் வாய்ந்த மதுரையின்கண் ணிருந்த, குலச்சிறை முனிவன் எதிர்கொளச்சென்று - குலச்சிறையென்னுந் தவமுடையோன் தம்மை எதிர்கொண்டழைக்க அங்கு எழுந்தருளி;

முற்படர்ந்து, முற்சென்று; என்றது, நாளுங்கோளும் நல்ல வல்லவென அப்பர்பெருமான் தடுத்துந், திருஞானசம்பந்தர், திருவருட்டுணை இருப்பின் அடியார்க்கு எல்லாம் நல்லனவே யாமெனக் கூறிப் பாண்டிநாடு சென்றமை குறித்ததென்க.

கூடன் மாநகர்க்குச் சந்தமிழடைகொடுத்துச் சிறப்பிக்குமுண்மை ‘பீடுயர் செந்தமிழ்க்கூட' லென்புழி (24) யுரைக்கப்பட்டது.

'தமிழ்க்கூட' லென்று மீண்டுந் தமிழடைகொடுத்தது, தமிழ்வளர்ச்சிக்குக் கூடன்மாநகரே உரித்தாயிருந்தமை வலியுறுத்தற்கு. அன்றியுந், தமிழ்நாட்டுநகர்களுள் எல்லாச் சிறப்புகளாலுந் தலைமை பெற்று விளங்கினமையானும் சான்றோர்களானியன்ற செந்தமிழ்ப் பாட்டுகள் நிரம்ப உடைமையானுந், திருஞானசம்பந்தர் தேவாரம் முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/133&oldid=1586877" இலிருந்து மீள்விக்கப்பட்டது