உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் 20

அதுகண்டு திரு முலைப்பால்நிறைந்த பாண்டிமாதேவியார் முலைமுகந்திறந்து தானே பெருக்கெடுத்து வழிந்தபாலை அவர்க்குவேண்டுமளவும் ஊட்டி வேட்கை தணிவித்தாரெனவும், அதனாற்பிள்ளையார் அவ்வரசியார்க்கும் பொன்போலும் புதல்வராயினாரெனவும் ஆசிரியர் திறம்படக் கற்பித்துக் கூறினமை நுண்மாணுழைபுல மிக்க புலவரனைவரானும் பெரிதும்பாராட்டி மகிழற்பாலதாகும். மங்கையர்க்கரசியார்க்குத் திருமுலைசுரந்த உண்மை,

66

‘சுரந்த திருமுலைக்கே துய்யசிவ ஞானஞ் சுரந்துண்டார்; பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த மனமுடையாள் அன்பிருந்த வாறு”

என்னுந் திருக்களிற்றுப்

தெளியப்படும்.

படியாராலும்

(54)

இனிது

'சில்லமுது' சிறிதளவான அமுதெனக; தனக; "தேனெனப் பாலெனச் சில்லமிர் தூற்றென' என்னுஞ் சீவகசிந்தாமணி யினும் (நாமக, 163) இஃதிப்பொருட்டாய் வருதல் அறியற்பாற்று.

‘வேட்கையின்' என்றவிடத்து, இன் ஒடுப்பொருளது;

'பொன்போற் புதல்வன்; என்றது, பொன்னைப்போற் போற்றப்படும் புதல்வனென்றற்கு.

'சென்று, தெருட்டி' யெனத்தொடுத்துக்கொள்க.

(63-65) வழுதிகொண்ட முழுநோய் தீர - பாண்டியன் நெடுமாறன் அடைந்த நோய்முழுமையுந் தீரும்பொருட்டு, அன்னை ஊட்டிய அமிழ்தை - உமையம்மையார் சீகாழியில் உண்பித்த திருவருட்பாலை, இன் உரைச் செந்தமிழ் ஆக்கித் தந்து இனிய சொற்களால் தாடுக்கப்பட்ட செந்தமிழ்ப்பாட்டுகளாக இயற்றிக்கொடுத்து, அதுகெடுத்து அந்நோய் முழுமையும் நீக்கியருளி,

‘நோய்' என்றது ஈண்டு வெப்புநோய்' முதலியவற்றையென்க. சமண்குருமார் தீர்த்தற்கென்று பகுத்துவிடப்பட்ட உடம்பின் இடப்பாகத்து நோயையும் அவர் தீர்க்கமாட்டாமையிற் பிள்ளையார் தாமே தீர்த்தருளினமையொடு பாண்டியற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/135&oldid=1586879" இலிருந்து மீள்விக்கப்பட்டது