உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

111

பிறவிதொட்டே இருந்தகூனையும் நிமிர்ந்திட்டமைதோன்ற, ‘முழுநோய் தீர’ வென்றார்.

அருட் கருத்துகளைத் தமிழாலிசைத்தாரென்றற்கு, ‘அமிழ்தைத் தமிழாக்கித்தந்து' என்றார். அது, நோய்.

(66-69) பால் படு பூதமும் மேல்படுபொருளும் ஐந்து கூற்றிற்பட்ட முதற்பொருள்களும் அவற்றிற்கு மேற்பட்ட நுண்பொருள்களும், தன் வழிப்படூஉம் தன்மைய ஆகலின் தன்நினைவின்வழியே நடைபெறும் இயல்புடையன

வாகையால், தான் பிறிது ஆகல் வேண்டின் ஒருகால் ஒருபொருள் பிறிதொரு பொருளாக மாறுதலைத் தான் திருவுளத் தெண்ணினால், தலைமயங்கி - அவைமுன்னிலைமை மாறி, தம்தொழில் திரிந்து நந்தும் என்பதும் - தமக்கு இயல்பாக உள்ள தொழில்களும் மாறுபட்டுக் கெடும் என்பதும்;

‘பாற்படு பூதமென்றது மண் புனல் அனல் கால் வான் என்னும் முதற்பொருள்கள் ஐந்தும் ஐந்து வகையாகப்பிரிந்து

நிற்றலையுணர்த்திற்று.

'மேற்படு பொரு' ளென்று வேறு கூறினமையின், ஈண்டுப் பூதமெனப் பட்டவை தூவா மாயையிற் றோன்றி மண்முதலாக எண்ணப்பட்ட இப்பருப்பொருள்கள் ஐந்துமேயாம் என்பதும், இனிமேற்படுபொருள்க ளெனப்படுவன இவ்வைம்பெரும் பொருள்களுக்கும் வேறாகத் தூயமாயைக்கட்டோன்றும் விந்துவும் நாதமும் முதலான நுண்பொருள்களாமென்பதுந் துணியப்படும். தான், இறைவன்.

(70) இழித்துக் கொடுக்கப்படும் செழித்துத் தோன்றுமென்பதும்;

இழிக்குமென்பது செயப்பாட்டு வினை.

பொருள்களுஞ்

(71) முறையே நீரிலும் நெருப்பிலும் வைத்து ஒருபால் விளக்கிக்காட்டினை;

நீர், பாண்டிநாட்டின் வைகையாற்று நீர்.

நெருப்பு, திருஞானசம்பந்தப் பிள்ளையார் கட்டளைப்படி பாண்டியன் அரசவைக்குமுன் ஒரு தீக்குழியில் வளர்க்கப்பட்ட தீயாகும்.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/136&oldid=1586880" இலிருந்து மீள்விக்கப்பட்டது