உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

❖ - 20❖ மறைமலையம் - 20

நிகழ்ந்த முறையே இவற்றை நெருப்பினு நீரினுமென மாற்றிப் பொருளுரைப்பினுமாம்.

திறம், ஈண்டுப் பால்: பக்கம்.

நீரினும் நெருப்பினு மென்புழிச் சாரியை நிற்க உருபு தொக்கது. மேல் வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

(72) காயாத பனைமரத்திலும் எலும்பிலும் வைத்து மற்றொருபால் விளக்கிக்காட்டினை;

‘பனை' யென்பது திருவோத்தூரிற் சிவனடியாரொருவர் வளர்த்த பனைகள்; அவை காயாத ஆண்பனைகளாய் நின்றன. ‘என்பினு' மெனப்படுவது பூம்பாவையினெலும்பு.

நீரினுநெருப்பினுங் காட்டினை யொருதிறமென்பது, ‘தந்தொழிறிரிந்து நந்துதலை' யெனவும், பனையினுமென்பினுங் காட்டினை மறுதிறமென்றது 'இழிக்கும்பொருள் செழித்தலை’ யெனவும் நிரனிறை யாகவைத்துப் பொருளுரைத்துக்கொள்க.

பாண்டிமாநாட்டு மதுரைமாநகர்க்குச் சென்ற பிள்ளை யார், தமக்கு மாறாய்நின்ற சமண்குருமார் விரும்பியபடி சொற்போரிலன்றி நிகழ்ச்சிப்போரிலும் வெல்வான்கருதி ஒரு தேவாரப்பாட்டெழுதிய திருவேட்டை எரியிலிட, அது வெந்தழியாமற் பச்சென்றிருந்தது. அங்ஙனமே பின்னும் அவர், மிகவும்விரைவாய் ஓடுகின்ற வைகையாற்று நீரில் மற்றொரு தேவாரச் செந்தமிழெழுதிய ஏடுஇட, அது நீரோடும் வழியே சல்லாமல் எதிரேறி நீரைக்கிழித்துக்கொண்டு சென்றது. ‘நெருப்பினு நீரினுங் காட்டிய ஒருதிறம்' இவையாம்; இவற்றால் நீருந்தீயுமென்னும் முதற்பொருள்கள் தலைமயங்கித் தந்தொழில் திரிந்து நந்தினமை காண்க.

இனிப், பாண்டிநாட்டை விட்டு நீங்கிப் பிற திருப்பதி களையும் வணங்கிக்கொண்டுவந்த திருஞானசம்பந்தப் பிள்ளை யார், தொண்டை நாடு போந்து திருவோத்தூரின்கண் எழுந்தருளி யிருந்த ஞான்று, ஆண்டிருந்த சிவனடியாரொருவர் சிவ பெருமானுக்காக வளர்த்துவந்த பனைமரங்களெல்லாம் ஆ ஆண்பனைகளாய் வளர்ந்து காயாவாய் நிற்ப, அதுகண்டு அவ்வடியாரொடு மாறுபட்ட அவ்வூர்ச் சமண்மாந்தரனைவரும் அவரை அதுவே ஏதுவாகக் கொண்டு இழித்துரைத்தார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/137&oldid=1586881" இலிருந்து மீள்விக்கப்பட்டது