உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

று

113

பிள்ளையார் அஃதறிந்து உடனே ஒரு தீந்தமிழ்த்திருப்பதிகம் ஓதி அவ்வாண்பனைகளெல்லாங் குரும்பைக் குலைகளுடன் பெண்பனைகளாக மாறித் தோன்றுமாறு செய்தார். பின்பு திருமயிலாப்பூரின் கண்ணுஞ் சிவநேசரென்னும் மெய்யன்ப ரொருவர் பாம்புகடித்தமையால் உயிர் நீங்கிய தன் அருமைப் புதல்வியின் உடம்பெலும்புகளை எடுத்துவைத்துக் கொண்டு திருஞான சம்பந்தரின் நல்வரவு நோக்கியிருப்ப, அவரும் அங்கெழுந் தருளியக்கால் அந்நிகழ்ச்சியறிந்து அவ்வெலும்பு களைத் திருக்கோயிலின் முன்னர்க் கொணர்வித்து, அரியதொரு திருப்பதிகம் பாடிப் ‘பூம்பாவாய்' என அழைத்து அத்திருமகளை எழுப்பியருளினார்.'பனையினும் என்பினுங் காட்டிய மறுதிறம்' இவையாம். இவற்றால், இழிக்கப்பட்டு நின்ற பனைமரங்களும் எலும்புகளும பிள்ளையாரது திருவருணோக்கத்தாற் பெண் பனைகளாகவும் தெளியப்படும்.

L

பூம்பாவையாகவுஞ் செழித்தமை

(72-76) இனியே - அதன்மேல், அறிவு ஒளி கொளீஇ அறிவு விளக்கத்தை எல்லாருங்கொள்ளவைத்து, புரைநெறிப் பொய்ச் சமண்முறிய நூறி - குற்றம்பொருந்திய முறைமையினை யுடைய பொய்யான சமண்மதத்தை இடையற்று விழத் துகளாக்கி, மெய்த்திறம் கிளக்கும் மெய்ப்பொருள் சைவம் மெய்வகைவிளக்கி -மெய்ப்பொருள் வகைகளைக் கிளந்துகூறும் மெய்ம்மையையே பொருளாக்கொண்ட சைவ சமயத்தின் கோட்பாடுகளை மெய்ம்முறைகளால் விளக்கிக்காட்டி, பரங்குன்று அமர்ந்தனை திருப்பரங்குன்றென்னுந்

திருப்பதியின்கண் எழுந்தருளி யிருந்தனை;

கொளீஇ, கொள்ளச்செய்து; ஆவது விளங்கச்செய்தல்;

-

‘புரை' யென்பது, பருப்பொருளறிவினார்க்கு உண்மை போல் மேல்தோன்றிச், சிறிது நுண்ணறிவுடையராய் உள்நோக்கு வார்க்கும் அங்ஙனம் ஏதோருண்மையும் உடையதன்றாய்ப் புரை படுதலாகும். எனவே, அது 'பொய்ச்சமண்' எனப்பட்டதென்க.

'நூறுதல்' பொடிபடுத்தல், இடித்தல்; திவாகரத்திலும் “எழுதெழின் மாடத் திட னெலா நூறி’ யென்னும் புறப்பொருள் வெண்பாமாலை (உழிஞை, 26) யிலும் இதற்கு இப்பொருள்கள் உண்மைகாண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/138&oldid=1586882" இலிருந்து மீள்விக்கப்பட்டது