உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

  • மறைமலையம் - 20

திருப்பரங்குன்று; திருமுருகனது ஆறு படைவீடுகளு ளொன்று; ஏனைய திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமி மலை), திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), குன்று தோறாடல், பழமுதிர்சோலை யென்பனவாம்.

இந்நான்கு அருந்திறல்நிகழ்ச்சிகளுந் திருவருட்கோட் பாட்டால் இயற்கைக்கு வேறாகவும் நிகழ்ந்தமையால், அத்திருவருட்கோட்பாடு வாயாத சமண்மதம் இவ்வாற்றால் தானே அழிந்தொழியா நின்றதென் றறிந்துகொள்ளப்படும்.

உயிருடைப்பொருள்கள் அல்லாத நீரினுநெருப்பினுங் காட்டிய திறத்தை ‘ஒருதிற' மென்று முன்னோதி உயிருடைப் பொருள்களிற் காட்டிய ஏனையிரண்டனையும் மறுதிறமெனப் பின்னோதினார் ஆசிரியர்.

-

குன்றெங்குங்காணப்படுந்

-

(76-81) அது பெயர்ந்து - பின்னர்த் திருப்பரங்குன்றினின்று நீங்கி, இரங்குவால் அருவி நிரம்பத்தோன்றும் ஆவினன் குடியின் அசையினை ஒலிக்கின்ற வெள்ளிய அருவிகளின் வீழ்ச்சி திருவாவினன் குடியென்னுந் திருப்பதிக்கண் இருந்தனை; அதற்புறம் ஏரகத்து எழுந்தனை அதன்பிறகு திருவேரகமென்னுந் திருப்பதியின்கண் எழுந் தருளினை; நேரிதின் நுட்பமாக, ஒருமொழிவைத்த உட்பொருள் விரிப்பத் திருவளர் தணிகையின் அமர்ந்தனை ஓமென்னும் ஒருமொழி தன்கட்பொதிந்துவைத்த உட்பொருள்களை விரித்து விளக்கும்பொருட்டுச் சிறப்பு ஓங்குகின்ற திருத்தணிகைமலையி லமர்ந்தனை.

‘இரங்குதல்’, ஒலித்தல், 'இரங்குவாலருவி' யென இதன்கண் வருமாறுபோலவே, "இலங்குவெள்ளருவி" (மதுரைக்காஞ்சி, 299) யெனவும், “வால்வெள்ளருவி” (அகநானூறு, 308) யெனவும் பழைய இலக்கியங்களில் வருதல் காண்க.

‘அசைதல்’ இருத்தலென்னும்பொருட்டு; “ஆவினன்குடி யசைதலு முரியன்” (திருமுருகாற்றுப்படை, 176) என்புழி நச்சினார்க்கினியருரைக்கும் உரையானும் ஈதறியப்படும்.

'நேரிதின் விரிப்ப' வெனக்கூட்டுக.

முருகக்கடவுள் தம் தந்தையாரான சிவபெருமானுக்கு ‘ஓம்’ என்னும் ஒருமொழியை ஆசிரியர் முறைலியிருந்து செவியறிவுறுத்து தற்பொருட்டுத் திருத்தணிகை மேவினாரென்பது.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/139&oldid=1586883" இலிருந்து மீள்விக்கப்பட்டது