உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

115

(81-96) அதற்புறம் அதன்பின், நின்கழல் கிடந்த அருகா அன்பின் - நினது திருவடிக்கட் பதிந்துகிடந்த கெடாத அன்பினால், சைவம் வளர்க்கும் மெய்வகை மெய்வகை மரபின் சைவசமயத்தை நாடெங்கும் பரப்புகின்ற மெய்க்கூற்றின்கட்பட்ட முறைமை யினாலே, உடல் பொருள் ஆவி உனக்கு என நிறுவி தம் உடலும் பொருளும் உயிரும் உனக்கே உரியவென நிறுத்தி, நின்குறித்து எழூஉம் அதற்கும் இன்பத்து அவ்வாற்றால் நின்னைக்குறிக் கொண்டு எழுகின்ற நிலையான இன்பத்தினால், நின்பெயர் அல்லது பிறிதுஒன்று நவிலா - நினது புகழையல்லாமற் பிறரொருவர் புகழை நாவாற்கூறாத, மன்பெரும் புலவோன் மிகப்பெரிய புலமையினையுடையவனும், தந்தையைக் காட்டும் தாய் எனப்போந்து நாயினும்கடைய என்னையும் ஒருபொருள் படுத்து நின் இயல்பு ஒருதுறைப்புகுத்தி உரைக்கும் உரவோன் ஏதும் அறியாத ஒருமகவுக்குத் தந்தையைக்காட்டி யுணர்த்துந் தாயைப்போல் எழுந்தருளிவந்து நாயினுங்கீழ்ப்பட்ட ஏழை யேனையும் ஒருபொருளாகத் திருவுளத்தடைத்து நின் என் பெருங்குணங்களையும் யாம் அறியத்தக்கதொரு துறையிலே

-

யமைத்து அறிவுறுத்தும் பேரறிவினையுடையவனும், சோமசுந்தர தேசிகப்பெயரின் ஏமுறவந்தோற்கு அருள் - ‘சோமசுந்தர' வாசிரியனென்னுந் திருப்பெயரோடு எல்லாரும் பேரின்ப நெறியை அடையுமாறு தோன்றினவனுமான என் அருமை ஆசிரியனுக்கு அருள்செய்ய, காமுற்று - விரும்பி, பொருள் உடல் ஆவி பொருள்பெற வழங்கி - நின்பொருளும் உடலும் உயிரும் உண்மைநிலையிற் பொருந்தக்கொடுத்தருளி, வேண்டுழி எல்லாம் விரும்பிநின்று ஏத்த அவற்கு எளிவந்த தவப்பெருந்தன்மையை - விரும்பியபோதெல்லாம் அவன் அன்புகொண்டெழுந்து வழுத்த அவனுக்கு எளிதாய் வெளிப்போந்த மிகப்பெரிய அருளியல் பினையுடையையாய், ஒற்றியூர்ப்புகுந்து வைகினை திருவொற்றியூரிற் போந்து அமர்ந்தருளினை;

-

-

அருகா' கெடாத, இப்பொருட்டாதல், “பருகுவன்ன அருகா நோக்கமோடு” என்னும் பொருநராற்றுப்படை (77) யுரையிற் காண்க.

மரபு - முறைமை; புறப்பொருள் வெண்பாமாலை (1, 1) "தொல்குடிமரபின்” என்பதன் உரையைக் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/140&oldid=1586884" இலிருந்து மீள்விக்கப்பட்டது