உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் - 20

‘அற்கல்’, நிலைபெறல்; “அற்கா இயல்பிற்றுச்செல்வம்”

என்னுந் திருக்குறளைக் காண்க.

‘என’, உவமஉருபு.

திருவருணெறியின் கண்ணும் வீடுபேறு நண்ணும் உயிர்க்கு அம்மையே அப்பனைக் காட்டியருளு முண்மை,

"மாயநட் போரையும் மாயா

மலமெனு மாதரையும்

வீயவிட் டோட்டி வெளியே

புறப்பட்டு மெய்யருளாந்

தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்து

ஏயும தேநிட்டை யென்றான் எழிற்கச்சி யேகம்பனே”

திருவேகம்பமாலை,

என்னும் பட்டினத்தடிகள் திருமொழியினாற் றெளியப்படும்.

10)

'சோமசுந்தரவாசிரியன் தன்னுடைய உடல்பொருளுயிர்

களை நினக்கே உரியவெனவழங்கி அன்புசெய்தமையின், நீயும் அவனன்புக்கு உவந்து நின்னுடைய உடல்பொருளுயிர்களை அவனுக்கு வழங்கி அருள்காட்டினை' யென்னும் இவ்வன்புமுறை “என் உடலுயிராதிய வெல்லாம் நீ யெடுத்துக்கொண்டு உன் உடலுயிராதியவெல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்." என்னும் இராமலிங்க அடிகளின் (6, பிரியேனென்றல், 3) திருவருட் பாவினும் எடுத்துக்காட்டப் படுதல் இங்கு நினைவுகூரற்பாலது.

'சோமசுந்தரகுரவ' னென்றது, தமக்குச் சமயநுண்பொருள் செவியறிவுறுத்திய ஆசிரியரை.

தன்மையை, முற்றெச்சம்.

(96 - 105) முற்றவும் நின்பெருந்தன்மையை அறிந்து முழுதும் நினது மேலான அருட்டகைமையைத் தெரிந்து, நின் அடி இரவொடு பகலும் ஒருவாது வணங்கி - நினது திருவடியை இரவொடு பகலுமாய் ஒழியாமல் வணக்கஞ்செய்து, நா தழுதழுப்ப ஏத்துஉரை கிளந்து - நாக்குத் தழுதழுப்படையுமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/141&oldid=1586885" இலிருந்து மீள்விக்கப்பட்டது