உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

117

வணக்கவுரைகள் சொல்லி, நெஞ்சம் நெக்குடைந்து உள்ளம் உருகி, மெய்விதிர்விதிர்ப்பப் பெறுவதற்கு உடம்பு நடுநடுங்க அருள்பெறுதற்கு, எளியேன் - ஏழையேன், அரியென் ஆயினும் - அருமையுடையேனானாலும், குவடுகெழு பெரு நிறப் பொன்மலை அடைந்த கருநிறக்காக்கைக்கு உறுவதுஎன - குடுமி பொருந்திய மிக்க ஒளிவாய்ந்த பொன்நிறமான மலையை நண்ணிய கருநிறமமைந்த காக்கைக்கு அப்பொன்னிறமே பொருந்தல்போல, அவனொடு கெழூஉம் சார்பின் இவண் அது சிவணவும் பெறுகுவென் அச்சோமசுந்தர குரவனொடு சார்கின்ற சார்பினால் இங்கு அவ்வருணிலையை யடையவும் பெறுவேனென்பது.

-

நாத்தழுதழுத்தல், நாக்குழறல் நெக்குடைந்து, உருகி, விதிர் விதிர்த்தல், நடுநடுங்கல், சிவணல், பொருந்தல்.

'காக்கைக் குறுவதாலெனச் சிவணவும் பெறுகுவ' னென்று தாடரை மாற்றியியைத்துப் பொருளுரைத்துக்கொள்க.

'மெய்விதிர்விதிர்ப்பப் பெறுவதற்கு' என்பதன் இடையில் அவாய்நிலையால் அருள் என்னும் ஒருசொல் வருவித்துரைக்க. பெறுகுவென் என்பதிற்கு சாரியை, அன்று, ஆல், ஏ

அசைகள்.

மலையின் பொன்மை இறைவனருளுக்கும், காக்கையின் கருமை உயிரின் மலத்துக்கும் உவமையாம்; பொன் மலையடைந்த கருநிறக் காக்கைக்குப் பொன்னிறமுறுதல்போ' லென்றுரைக்க.

8.வள்ளன்மை கிளத்தல்

“உறுபொருள் காணா வுணர்விலார் மாட்டுப் பெறுபொருள் வேண்டல் பிழையா - னறுநெஞ்சே யேந்துமுலை வள்ளி கொழுந னெழிலொற்றிப் போந்து குடியிருக்கும் போது.”

(இ-ள்) நறு நெஞ்சே - நல்ல நெஞ்சமே! ஏந்துமுலை வள்ளிகொழுநன் உயர்ந்துநிற்குங் கொங்கைகளையுடைய வள்ளியின் கணவனான ஆறுமுகன், எழில் ஒற்றிப்போந்து குடியிருக்கும்போது -அழகிய திருவொற்றித் திருப்பதியின்கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/142&oldid=1586886" இலிருந்து மீள்விக்கப்பட்டது