உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் - 20

-

எழுந்தருளிவந்து குடியாய் அமர்ந்திருக்கும்போது, உறுபொருள் காணா உணர்வு இலார்மாட்டு தம்முயிரொடு வருவன நல்வினை தீவினையேயல்லாமல் வேறு அல்லவென்று அறிய மாட்டாத பகுத்துணர்வு கூடாதவர்களிடத்தில், பெறுபொருள் வேண்டல் பிழை - நீ அடைதற்குரிய பொருளை விரும்பிக் கேட்டல் குற்றமாகும்.

ஆகவே,

எல்லாம்

வல்ல ஆறுமுகப்பெருமானே

நமக்குவேண்டு வனவெல்லாம் உவந்தளிப்பானென்பது கருத்து; எனவே அவனது சிறந்த வள்ளன்மை கிளந்தவாறாமென்க;

“பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை

புகலூர்பாடுமின் புலவீர்காள் இம்மையேதருஞ் சோறுங்கூறையு மேத்தலாமிடர் கெடலுமாம் அம்மையேசிவ லோகமாள்வதற்

கியாதுமையுற வில்லையே’

என்னுஞ் சுந்தரமூர்த்தி நாயனாரது தேவாரத்திருமொழியும் இங்கு நினைவுகூரற் பாலது.

'உறுபொருள், ஈண்டு நல்வினை தீவினை.

பறுபொரு' ளென்பதற்குச் சிறிது முயற்சியெடுத்தால் செல்வப்பொருளென்

எவரானும் எளிதிலடைதற்குரிய றுரைப்பினுமாம்.

'நறுநெஞ்சே' யெனப்பட்டது, அறிவுறுப்பதை ஏற்குந்

தகுதியுடைய நெஞ்சமென்றற்கு.

நிற்றல்.

‘ஏந்துத’லாவது, தாழாது உயர்ந்து அல்லது நிமிர்ந்து

இல்வாழ்வாரே எவர் எதை விரும்பினாலும் இல்லை யென்னாமல் அளிக்கு நிலையராகலான், இங்கு முருகப் பருமானது வள்ளன்மை கிளந்தோதும் அடிகள் அவனை ல்வாழ்வானாகக் குறிப்பான் கருதிக் ‘குடியிருக்கும் போது' எனக்கூறி மகிழ்வாராயினர். ஆல் அசை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/143&oldid=1586887" இலிருந்து மீள்விக்கப்பட்டது