உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

9. தலைமகள் தோழிக் கறத்தொடு நிற்றல் “போதாய்ந்து வெண்ணில வொக்கும் பொடிமணற் பூஞ்சிற்றிலொன் றோதாயஞ் சூழ விழைத்தாடுங் காலை யொருவடிவேற் சூதான காளை திருவொற்றி யீசர் துணைப்புதல்வன் காதாருங் கண்ணி சிதைத்துநக் கோடிக் கரந்தனனே."

119

(இ-ள்) காது ஆரும்கண்ணி - காதுகள்வரையில் நீண்டு நிறையுங் கண்களையுடைய தோழி!, போது ஆய்ந்து - மலர்களை ஆய்ந்துதெரிந்து, வெள்நிலவு ஒக்கும் பொடிமணல் பூம் சிறி இல் ஒன்று-வெள்ளிய நிலவினை யொத்த பொடி மணலால் அழகிய சிறுவீடொன்று, ஓது ஆயம் சூழ மழலைமொழிகள் ஓதுகின்ற தோழியர்கூட்டங்கள் உடன்சூழ, இழைத்து அமைத்து, ஆடுங்காலை -நான் விளையாடும்பொழுது, ஒரு வடிவேல் சூதான காளை- ஒரு கூரிய வேலையுடைய வஞ்சகமான காளைப் பருவ முடையோனும், திருவொற்றிஈசர் துணைப் புதல்வன் திருவொற்றிநகரில் எழுந்தருளியிருக்குஞ் சிவபெருமான்றன் இரண்டாம் புதல்வனுமான ஆறுமுகன், சிதைத்து நக்கு ஓடிக் கரந்தனன் - அதனை அழித்து நகைத்து ஓடி ஒளித்தனன்.

போது ஆய்ந்தும் சிற்றில் இழைத்தும் விளையாடுதல் மகளிர் செயலாம்; போது ஆய்ந்தபின்னர் ஈண்டுத் தலைவி சிற்றில் இழைத்தாளென்று கொள்க.

பொடிமணல் வெளேலென்றிருத்தலின், அதனை நிலவோ டொப்பிட்டுக் கூறுதல் மரபு; "நிலவுமணல் வியன்கானல்' (புறநானூறு, 17) எனவும், 'நிலாமணல்' (மணிமேகலை, 8, 11) எனவும் பழைய இலக்கியங்கள் வருதல்காண்க.

கண்ணி, இயல்பாய்நின்ற விO.

சிறுபருவத்தில் தான் இழைத்தாடிய மணற்சிற்றிலைத் தன்காதலன் அழித்துக் குறும்புசெய்த இயல்பினைத் தலைவி தன்தோழிக்கு எடுத்துக்கூறி அறத்தொடுநிற்றல்,

“சுடர்த்தொடீஇ கேளாய், தெருவினா மாடு

மணற்சிற்றிற் காலிற் சிதையா வடைச்சிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/144&oldid=1586888" இலிருந்து மீள்விக்கப்பட்டது