உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் - 20

கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி

நோதக்க செய்த சிறுபட்டி”

என்னுங் கலித்தொகைக் கண்ணுங் (குறிஞ்சிக்கலி, 15) கூறப்படுதல் இங்கு நினைவுகூரற்பாலது.

6

அறத்தொடு நிற்றலாவது: அறம் என்பது தக்கது; தக்கதனைச் சொல்லிநிற்றல்.... அல்லதூஉம், பெண்டிர்க்கு அறமென்பது கற்பு, கற்பின்றலை நிற்றலென்பதூஉமாம். இனித் 'தோழிக்கும் உரித்து' என்ற உம்மையால் தலைமகட்கும் அறத்தொடுநிலை உரித்தென்பது, அஃதாமாறு இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தானும் பாங்கற் கூட்டங் கூடியானுந் தெருண்டுவரைதலுற்றுத் தமரை விடும்; விட்ட விடத்து அவர்மறுப்ப; அஃது இலக்கணமாகலான், அங்ஙனம் மறுத்த விடத்துத் தலைமகள் வேறுபடம். எம்பெருமான் மறுக்கப் பட்டமையான் மற்றொருவாறாங் கொல்லோவெனக் கலங்கி வேறுபாடு எய்தின பொழுதே தோழிக்குப்புலனாம்; புலனாயின விடத்து எம்பெருமாட்டி, நினக்கு இவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்று? என்னும், என்றவிடத்து, இஃதெனக்குப் பட்டது; இன்னவிடத்து நீயும் ஆயங்களுந்தழையுங் கண்ணியுங் கோடற்கு என்னிற் சிறிது நீங்கினாய்; யான் நின்று ஒரு மணிச்சுனை கண்டேன்; கண்ட அம்மணிச்சுனைதான் ஆம்பலே குவளையே நெய்தலே தாமரையே என்றிப்பூக்களால் மயங்கி மேதக்கது கண்டு வேட்கையான் ஆடுவான் இழிந்தேன்; இழுக்கிக் குட்டம் புக்கேன்; புக்குத்தோழியோவென, நீ அங்ஙனங்கேளாயா யினாயாக, ஒருதோன்றல் தோன்றிவந்து எனதுதுயர் நீக்குதற்காகத் தன் கை நீட்டினான்; நீட்டினவிடத்து மலக்கத்தான் நின்கையெனப் பற்றினேன்; பற்ற வாங்கிக் கரைமேல் நீங்கினான்; அன்று நீ

நிறீஇ கவலுதியெனச்சொல்லேனாயினேன்;

எவ்வெல்லைக்கண்ணுங்

நீ

கைவிடாதாய் அஞ்ஞான்று கைவிடலினை ஆக்கிற்று விதியாகாதே? இனிப், பிறிதொன்றாங் கொல்லோ வெனக்கலங்கி வேறுபட்டே னென்று தோழிக்குத் தலைமகள் அறத்தொடுநிற்கும் என்று ஆசிரியர் நக்கீரனார் உரைத்த உரையால் (இறையனாரகப்பொருள், 29 ஆஞ்சூத்திரம்) அறத்தொடு நிற்றல் இன்னதென்றுணர்ந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/145&oldid=1586889" இலிருந்து மீள்விக்கப்பட்டது