உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

10. ஒப்புமைகூறி அருணிலை வேண்டல்

121

இதன்கண் அடிகள் தமக்கும் இறைவனுக்குஞ் சில கற்பனை ஏதுக்கள் கொண்டு ஒப்புமைவறி, அவ்வொப்புமை யுண்மையின் அவன் தம்பாற் கேண்மைபொருந்தி அருள்தரல் இயையுமென வழக்காடி அருணிலைவேண்டல் கூறப்படுகின்றது.

(1-3) கரவு அறு மாந்தர்க்கு விரவுறுபழியின் - கள்ளம் நீங்கிய சான்றேர்பாற் கலந்து தோன்றும் பழியைப்போல், மறுவொடு விளங்கும் நிறைகதிர் மதியம் - களங்கத்தொடு விளங்கும் நிறைந்த கதிர்களையுடைய முழுநிலா, வெண்கதிர் விரிக்கும் தண் என் காலை -வெள்ளிய ஒளியை எங்கும் விரிக்கின்ற குளிரும் முன்னிராப்பொழுதில்;

கரவென்றது, இங்குக் கள்ளத்தனமான தீய எண்ணங்களை; மாந்தர்க்கு, வேற்றுமையுருபு மயக்கம். சான்றோர்மாட்டுக் காணப்படுங் குற்றமே யார்க்கும் விளங்கித் தோன்றுதல்பற்றிக் கரவறுமாந்தர்தம் பழி உவமைகூறப்பட்டது. இங்கு உவமையும் பொருளுமாக வந்த மாந்தரும் மதியமும் முறையே பொருளும் வமையுமாகவே வரல் வழக்காம்; வழக்காம்; ஏனெனிற், கரவறு மாந்தரினும் மறுவொடுவிளங்கு மதியமே எவர்க்கும் விளக்கமாய்த் தெரிந்ததொன் றாதலினென்பது; மற்று அவை இங்குப்பொருள் உவமமாகவும் உவமம்பொருளாகவும் வழக்கிற்கு மாறாக வழங்கப்பட்டுள்ளன; இங்ஙனம் மாறிவழங்குதலெல்லாம் இலக்கியச்சுவை மிகுத்தற்காம்; இன்னோரன்னவற்றைப் பிற்காலத்தார் 'விபரீதவுவமை’ (தண்டியலங்காரம், பொருளணி யியல், 2, 14) யெனக்கூறா நின்றனர். விரவுறல், ஒருசொல்.

-

(4-7) புலவுமணம் கமழும் பாக்கத்து புலால் நாற்றம் நாறுஞ் செம்படவர் சேரியில், நலம் கெழு தெரிவு இல் மாக்கள் புரிதிமில் புகுந்து நன்மைமிக்க பகுத்தறிவு இல்லாத செம்படவர் கட்டுகள் அமைந்த தோணியில் ஏறி, நிரைநிரைவகுத்த வகை அமை விளக்கம் - வரிசைவரிசையாகப் பகுத்துவைத்த முறை யமைந்த விளக்குகள், வானமீனின் வயின் வயின் இமைப்பவும் விண்மீன்களைப்போல் இடந்தோறும் ஒளிவிடவும்;

கடலினின்றுங்

கொணரப்படும்

மீன்களாற் செம்படவர்சேரியில் எஞ்ஞான்றும் புலானாற்றம் நாறுதலின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/146&oldid=1586890" இலிருந்து மீள்விக்கப்பட்டது