உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

  • மறைமலையம் - 20

அச்சேரி ‘புலவுமணங்கமழும்பாக்கம்' எனப்பட்டது; கமழ்தல் - நாறுதல், “கமழ்கடாஅத்து” (புறம், 3) என்புழிப்போல, திமில்புகுந்து மீன் பிடிக்குஞ் செம்படவர் தாஞ்செய்யுந் தொழில் தீதெனத் தெளிந்துகொள்ளாமையின், அவர் 'தெரிவின்மாக்கள்’

எனப்பட்டாரென்க.

விளக்கம், ஈண்டுச்சுடர்; இது தொழிலாகுபெயர்.

நீல நிறமான வானத்தில் மின்நிறமான விண்மீன்கள் ஒளிவிடுதல்போலவே, நீனிறமான கடனடுவில் மின்னிறமான விளக்கொளிகள் ஒளிவிட்டுப்பொலிதலின், கடற்படகுகளின் விளக்குகளுக்கு வான்மீன்கள் உவமையாயின.

(8-10) சிறுதுடி மருங்குல் கரும் கண் நுளைச்சியர் - உடுக்கையைப்போன்ற நுண்ணிய இடுப்பினையும் கரியகண் களையும் உடைய நெய்தல் நிலமகளிர், எழுவரும் எண்மரும் உழிஉழிக் கை பிணைந்து எழுவரும் எண்மருமாய் இடந்தோறுங் கைகோத்து, ஒருவாமரபின் குரவை அயரவும் - ஒருவரை விட்டொருவர் நீங்காத தன்மையொடு குரவைக்கூத்து ஆடாநிற்பவும்;

-

குரவையென்பது “காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள்பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனுங் கைபிணைந்தாடுவது” என்று அடியார்க்கு நல்லார் கூறியவுரையானும் (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை, 12), அவரெடுத்துக்காட்டிய

66

‘குரவை யென்ப தெழுவர் மங்கையர்

செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்

தந்நிலைக் கொட்பநின் றாட லாகும்

وو

என்னும் மிகப்பழைய தமிழ்ப்பாட்டானும் (சிலப்பதிகாரம், பதிகம், 77) இனிதுணரப்படும்.

அயர்தல் - ஆடுதலைச்செய்தல்.

மணல்

(11-17) அவர்தரு சிறாஅர் சிமீன் முகந்து அகழ்கேணியில் முறைமுறை விடுத்தும் - அந்நெய்தல்நில மகளிர் பெற்றெடுத்த சிறுவர் கழிகளிற் கிடக்குஞ் சிறுமீன்களைக் குடுவையிற் பற்றி முகந்துகொண்டுவந்து அருகே மணல்நிலத்தில் அவர்களாற் றோண்டியெடுக்கப்பட்ட ஊற்றுக்கிணற்றிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/147&oldid=1586891" இலிருந்து மீள்விக்கப்பட்டது