உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

123

ஒருவர்பின் ஒருவராய் விட்டு, (அதன்பின்) பொரிகெழு புன்னைப் பூந்துணர் வீழப்பப் புரிவளை எறிய - நெற்பொரிபோலும் பூக்களையுடைய புன்னைமரத்தின் பூங்கொத்துக்களை வீழ்த்தும் பொருட்டு முறுக்குண்ட சங்கினை மேல் வீச, கோடு தாக்கிப் பலவேறு உடைந்த நலம் கிளர் நித்திலம் அவ்வாற்றால் அம்மரத்தின் கிளைகள் முட்டுதலாலே பலவாய் வேறு வேறாய் உடைந்து சிதறிய நன்மைமிக்க அச்சங்கின் முத்துக்களை, கொழுவிய நனை எனக் குஞ்சிப்பெய்து செழுமையான அப்புன்னை மரத்தின் மொட்டெனக்கருதித் தமது தலைமயிரிற் செருகி, வழீஇ வீழக்கண் கலுழ்பு பெயரவும் - அவை மழமழ வென்றிருத்தலால் வழுவிவிழ அதனாற் கண்கலங்கி யழுது அங்கு நின்று நீங்கவும்;

-

முகந்தென்றமையின், குடவையில் முகந்தென்று கொள்க. கேணி - நெய்தல்நிலத்துச் சிறுகிணறு.

புன்கமரத்தின் பூநெற்பொரியை யொத்திருக்கு மென்பது, 'பொரிப்பூம்புன்கின்' என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளிலும் (368) காண்க.

சங்கின்வடிவு, முறுக்குண்டாற்போ லிருத்தலிற் ‘புரிவளை' யெனப்பட்டது. சங்கு உடைந்தால் அவை முத்துக்களாய்க் காணப்படுதலின் ‘நித்திலம்' எனப்பட்டன. வலம்புரியினின்றும் முத்துப் பிறக்குமுண்மை முன் (4: 8-9) காட்டப்பட்டது. வீழ்ப்பவென்பது பிறவினை; குஞ்சி, ஆண்பான் மயிர்.

கலுழ்பு, செய்புவென் வாய்பாட்டு வினையெச்சம். ‘சிறாஅர்” இசை நிறை அளபெடை, 'வழீஇ ' சொல்லிசை யளபெடை.

புன்னைப் பூங்கொத்தினை வீழ்த்தும்பொருட்டு அதன்மே லெறிந்த சங்குகள் குறிதப்பிக் கிளை களிற்றாக்குண்டமையின், உடைந்து சிதறின; அவற்றை அந்நெய்தலஞ் சிறார் புன்னை நனைகளே உதிர்ந்தனவென மயங்கித் தந்தலைமயிரிற் செருகினாராக, அவை மழமழ வென்றிருத்தலால் அம்மயிற் பொருந்தாமல் வழுவிவீழ்ந்தன; அவற்றை அவர் மீண்டுமீண்டுஞ் செருகுதலும் அவைதாமும் மீண்டு மீண்டு நழுவிவீழலின், அதுகண்டு அச்சிறார் அழுது கண்கலங்கி அங்குநின்றும் பெயர்ந்தாரென்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/148&oldid=1586892" இலிருந்து மீள்விக்கப்பட்டது